தற்போது உலகின் தலைசிறந்த 4 பவுலர்கள் யார் என்ற கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் வேக பந்துவீச்சாளர் ஜாகீர் கான் பதில் அளித்துள்ளார்.
சர்வதேச அளவில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்கள் யார் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடம் வர்ணனையாளர்கள் பலமுறை கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு அளிக்கப்படும் பதில் சுவாரசியமானதாக இருக்கும்.
தலை சிறந்த வீரர்களின் பலம் பலவீனத்தை கிரிக்கெட் வல்லுனர்கள் எடுத்துரைக்கும் போது அந்த கருத்துக்கள் ரசிகர்களையும் கவனத்தை பெறுகிறது. அந்த வகையில் இந்திய அணியின் விராட் கோலி, ரோஹித் சர்மா, எம்.எஸ். தோனி உள்ளிட்ட பலவீரர்கள் சர்வதேச அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளனர்.
தற்போதைய சூழலில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இந்திய அணியின் விராட் கோலி இருந்து வருகிறார். இதேபோன்று பும்ராவுக்கு இணையான பவுலர்கள் தற்போது உலக அரங்கில் இல்லை என பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் நவீன கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் யார் என்பது குறித்து முன்னாள் வீரர் ஜாகீர் கானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் முதல் இடத்தில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா இருப்பார் என்று தெரிவித்து அவரை பாராட்டினார்.
இதேபோன்று மற்றொரு இந்திய பவுலர் முகமது சமி, தென்னாப்பிரிக்காவின் ககிசோ ரபாடா, ஆஸ்திரேலியா அணியின் ஜோஸ் ஹாஸில்வுட் மற்றும் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆகியோரையும் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் என ஜாகிர் கான் பாராட்டியுள்ளார்.
அவரிடம் 4 பவுலர்களை மட்டுமே தேர்வு செய்யுமாறு கேட்கப்பட்டபோது இந்த 5 பௌலர்களை குறிப்பிட்டு இவர்கள் தவிர்க்க முடியாதவர்கள் என்று ஜாகிர் கான் பதிலளித்தார்.
.