Last Updated:

1000 மெட்ரிக் டன் தங்கத்துடன் சீனாவின் ஹூனான் மாகாணத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு ரூ.7 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

News18

ஹூனான் மாகாணத்தில் இருக்கும் பிங்ஜியாங் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தங்கச் சுரங்கம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு 1,000 மெட்ரிக் டன் அளவுக்கு தங்கம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதால், தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. இந்த தங்கம் சீனாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதோடு, உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் சீனாவை பாதிக்காமல் இருக்க உதவும்.

இந்த தங்கச் சுரங்கம் நிலத்திற்கு அடியில் மிகவும் ஆழமாக அமைந்துள்ளது. அதாவது சுமார் 2 கிலோ மீட்டர் ஆழத்தில் தங்க நரம்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தங்க நரம்புகள் என்பது பாறைகளுக்கு இடையே வரி வரியாக இருக்கும் தங்கம் தான். இந்த நரம்புகளில் மட்டும் சுமார் 300 மெட்ரிக் டன் தங்கம் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் துளையிடப்பட்ட பாறைகளுக்கு நடுவிலும் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தோராயமாக 1000 மெட்ரிக் டன் தங்கம் இருக்கும் என்று கருதப்படுகிறது.

இதையும் படிங்க: இமயமலை இல்லாவிட்டால் இந்தியா எப்படி இருக்கும்? – ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட கற்பனை வீடியோ!

அண்மைகால மதிப்பீடுகளின்படி, 2,000 டன்களுக்கும் அதிகமான தங்கத்தை சீனா இருப்பு வைத்துக் கொண்டு உலக தங்கச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகின் மொத்த தங்க உற்பத்தியில் தற்போது 10 சதவீத பங்களிப்பை சீனா வழங்கி வரும் நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தங்கச் சுரங்கம், சீனாவின் தங்கத் தொழிலை மேலும் வலுப்படுத்த உதவும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தங்கச் சுரங்கம் எப்படி உருவாகிறது?

புவியியலாளர்களின் கூற்றுப்படி, தாதுக்கள் நிறைந்த திரவங்கள் பூமியின் மேலோட்டத்தில் உள்ள விரிசல்கள் வழியாக நகர்ந்து, சுற்றியுள்ள பாறைகளுக்கு அடியில் சென்று தங்கிவிடும். பின்னர் வெப்பநிலை மற்றும் அழுத்தம் காரணமாக, அவை தங்க நரம்புகளாக மாறிவிடும். இந்த மாற்றம் உடனே நடைபெறாது. மில்லியன் கணக்கான ஆண்டுகள் ஆகும். அதன் பின்னர்தான் தங்கச் சுரங்கம் உருவாகிறது.



Source link