Last Updated:
Largest TV | ஆடம்பர டிவியை வாங்குபவர்களுக்கு, TCL ஒரு கவர்ச்சிகரமான டீல்களை வழங்குகிறது. இருப்பினும், இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.
TCL நிறுவனம் உலகின் மிகப்பெரிய QD Mini LED TVயை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. TCL 115X955 மேக்ஸின் விலை ரூ.29,99,990 ஆகும். இந்த டிவி ஆனது மிகப் பெரியது மட்டுமல்ல, இது ஒரு குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் கொண்டுள்ளது. இந்த TCL டிவியின் முழுப் பெயர் TCL 115 இன்ச் QD Mini LED TV ஆகும்.
இந்த ஆடம்பர டிவியை வாங்குபவர்களுக்கு, TCL ஒரு கவர்ச்சிகரமான டீல்களை வழங்குகிறது. இருப்பினும், இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும். TCL 115X955 மேக்ஸ் ஆனது ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா, ஆஃப்லைன் பிராண்ட் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் பிளாட்ஃபார்ம்களில் வாங்கலாம்.
TCLஇன் தொழில்நுட்பம்:
QD Mini LED தொழில்நுட்பமானது QLED மற்றும் OLED டிஸ்ப்ளேக்களின் சிறந்த அம்சங்களை ஒருங்கிணைக்கிறது. TCL 115X955 Max QD Mini LED TV ஆனது 144Hz ரெஃபிரெஷ் ரேட் உடன் 115 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. மேலும், இந்த டிவியில் 20,000க்கும் மேற்பட்ட லோக்கல் டைம்மிங் ஜோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், வண்ணங்களை முற்றிலும் இயற்கையாகவும், யதார்த்தமாகவும் வைத்திருக்கின்றன.
கேம் மாஸ்டர் தொழில்நுட்பமும் இந்த டிவியில் பயன்படுத்தப்பட்டுள்ளது, இதன் காரணமாக இந்த டிவி கேமிங்கிற்கு மிகவும் சிறந்தது. இந்த டிவியில் ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM) வழங்கப்பட்டுள்ளது. இது 10msக்கும் குறைவான லேட்டன்சியை வழங்குகிறது. இந்த டிவி FreeSync Premium Pro அம்சத்துடன் வருகிறது. இதன் காரணமாக இந்த டிவியில் கேமிங் அனுபவம் சிறப்பாக இருக்கும். இந்த டிவியில் ONKYO 6.2.2 Hi-Fi ஆடியோ சிஸ்டம் உள்ளது.
கனெக்ட்டிட்டி மற்றும் சாப்ட்வேர்:
தடையற்ற இன்டர்நெட் கனெக்ட்டிவிட்டிக்காக இந்த டிவி ஆனது Wi-Fi 6ஐ ஆதரிக்கிறது மற்றும் நான்கு HDMI போர்ட்களுடன் வருகிறது. இது கூகுள் TV சாப்ட்வேரில் இயங்குகிறது, மேலும் யூசர்களுக்கு பரந்த அளவிலான ஸ்ட்ரீமிங் ஆப்ஷன்கள் மற்றும் ஸ்மார்ட் அம்சங்களை வழங்குகிறது. இவை அனைத்தையும் தவிர, இந்த டிவியில் மல்டிவியூ 2.0 அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ப்ளூடூத் காலிங், IP68 ரேட்டிங் உள்ளிட்ட அம்சங்களுடன் அறிமுகமாகி இருக்கும் லாவாவின் ProWatch V1
இது யூசர்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு கன்டென்ட்டை இயக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இந்த டிவி ஹோம்கிட் மற்றும் ஏர்பிளே 2 அம்சங்களையும் ஆதரிக்கிறது. எனவே, இதை வேறு டிவைஸ்களுடன் இணைக்க முடியும். இது தவிர நிறுவனம் இந்த டிவிக்கு 1 வருட நிலையான உத்தரவாதத்தையும் வழங்குகிறது. இந்த டிவி TCL இன் T-Screen Ultra தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது யூசர்களுக்கு மிக உயர்ந்த கான்ட்ராஸ்ட் அளவை வழங்குகிறது.
January 17, 2025 2:25 PM IST