Last Updated:
LG அல்ட்ராஜியர் GX9 45GX990Aஆனது 5K2K (5,120 x 2,160) நேடிவ் ரெசலூஷன், 21:9 அஸ்பெக்ட் ரேஷியோ உடன் கூடிய 45 இன்ச் கேமிங் மானிட்டர் ஆகும்.
முன்னணி கொரிய தொழில்நுட்ப நிறுவனமான LG, உலகின் முதல் ஃபோல்டபில் 5K2K OLED மானிட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. அல்ட்ராஜியர் GX9 45GX990A மானிட்டர் நிறுவனத்தின் கேமிங் டிவைஸ்களின் கலெக்ஷனில் சேர்ந்துள்ளது. மானிட்டரில் Anti-Glare Low Reflection (AGLR) போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த ஃப்ளக்சிப்பின் மாடல் நவீன (WOLED) டெக்னாலஜியின் தயாரிப்பு ஆகும்.
லாஸ் வேகாஸில் நடைபெற்ற CES 2025 நிகழ்ச்சியில் இந்த ஃபோல்டபில் மானிட்டர்களை LG நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த ஃபோல்டபில் மானிட்டர்களின் விலை விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதனையடுத்து ஜனவரி 27ஆம் தேதி அன்று நடைபெறும் நிகழ்வில் மீதமுள்ள விவரங்களை LG வெளிப்படுத்தும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அறிக்கையின்படி, WebOS பிளாட்ஃபார்மில் இயக்கப்படும் மேலும் இரண்டு கேமிங் மானிட்டர்களையும் நிறுவனம் வெளியிடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. எல்ஜி அல்ட்ராஜியர் GX9 சீரிஸ் CES 2025இல் வெளியிடப்படும். இது, அட்வான்ஸ்ட் டூயல்-மோட், ஸ்மார்ட் அம்சங்களுடன் பிரமிக்க வைக்கும் 5K2K #OLED கேமிங் மானிட்டர்களைக் கொண்டுள்ளது என்று LG எலக்ட்ரானிக்ஸ் அதன் அதிகாரப்பூர்வ சேனலில் பதிவிட்டுள்ளது.
எல்ஜி அல்ட்ராஜியர் GX9 45GX990A: அம்சங்கள்
LG அல்ட்ராஜியர் GX9 45GX990Aஆனது 5K2K (5,120 x 2,160) நேடிவ் ரெசலூஷன், 21:9 அஸ்பெக்ட் ரேஷியோ உடன் கூடிய 45 இன்ச் கேமிங் மானிட்டர் ஆகும். NVIDIA G-SYNC மற்றும் AMD FreeSync பிரீமியம் ப்ரோ சான்றிதழ்களுடன், இந்த மானிட்டரை பிளாட் டிஸ்ப்ளேவிலிருந்து 900R கர்வ்டு ஷேப்பாக மாற்றலாம். இது கேமிங்கிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. மிக விரைவான 0.03ms (GtG) ரெஸ்பான்ஸ் டைமை வழங்குகிறது மற்றும் பல்வேறு ரெஃபிரேஷ் ரேட்டுக்கான ஆதரவையும் வழங்குகிறது.
LG, அல்ட்ராஜியர் GX9 சீரிஸில் அல்ட்ராஜியர் GX9 45GX990A கேமிங் மானிட்டர் மட்டும் அல்ல, இந்த சீரிஸில் மற்றொரு கேமிங் மானிட்டரான 45GX950A இடம்பெற்றுள்ளது. இந்த 45GX950Aஆனது 800R கர்வ்டு டிஸ்ப்ளே குறிப்பிடத்தக்க அம்சங்களையும் வழங்குகிறது. யூசர்களின் கேமிங் அனுபவத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட மற்றொரு விருப்பமாக இந்த மாடல் தனித்து நிற்கிறது. இந்த இரண்டு மாடலின் டிஸ்ப்ளேக்களும் ஒரு இன்ச்-க்கு 125 பிக்சல்களைக் (PPI) கொண்டுள்ளன. இணைப்பைப் பொறுத்தவரை, இந்த டிஸ்ப்ளேக்கள் 90W பவர் டெலிவரியுடன் USB-C போர்ட்களை வழங்குகின்றன.
இதையும் படிக்க: சமூக வலைதளங்களில் கொந்தளிக்கும் சியோமி பயனர்கள்… காரணம் இதுதான்..!
இதன் மூலம் Macs மற்றும் லேப்டாப்களை விரைவாக சார்ஜ் செய்ய முடியும். அத்துடன் DisplayPort 2.1 மற்றும் HDMI 2.1 ஆகியவற்றுடன் வருகிறது. webOS உடன், இந்த மானிட்டர்களை ஸ்மார்ட் டிவிகளாக பயன்படுத்தலாம். வழக்கமான 16:9 டிஸ்ப்ளேக்களுடன் ஒப்பிடும்போது, 21:9 அஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட இந்த மானிட்டர் ஆனது மிகவும் ஈர்க்கக்கூடிய கேமிங் அனுபவத்தை வழங்குகிறது.
January 08, 2025 12:55 PM IST