Last Updated:
அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவிடம் ரஷ்ய அதிபர் கலந்துரையாடினார். அதில் ரஷ்ய வான்வெளியில் நடந்தது துயரமான சம்பவம் என்று தனது கருத்தை தெரிவித்தார்.
அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் விழுந்த சம்பவத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மன்னிப்பு கோரியுள்ளார். புடின் பேசியது என்ன? இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 25-ஆம் தேதி விழுந்த சம்பவத்தில் 38 பேர் கொல்லப்பட்டனர். 29 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அஜர்பைஜானின் பாகு நகரில் இருந்து ரஷ்யாவின் கிரான்ஸி நகருக்கு புறப்பட்ட விமானம் கஜகஸ்தானில் உள்ள அக்தாவ் நகருக்கு திருப்பி விடப்படும்போது கீழே விழுந்து உடைந்ததில் 38 பேர் பலியாகினர்.
இது முதலில் பறவை மோதியதால் நேரிட்ட விபத்து என்று எண்ணப்பட்டது. ஆனால் விமானத்துக்கு வெளியே இருந்து ஏதோ பொருள் மோதியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவிடம் ரஷ்ய அதிபர் கலந்துரையாடினார். அதில் ரஷ்ய வான்வெளியில் நடந்தது துயரமான சம்பவம் என்று தனது கருத்தை தெரிவித்தார்.
மேலும் விமானம் முதலில் தரையிறங்க வேண்டிய இடமான கிரான்ஸியில் தரையிறக்கப்படாமல் இருந்ததாக கூறினார். கிரான்ஸி பகுதியில் உக்ரைனிய டிரோன் தாக்குதல்கள் அதிகளவில் இருந்ததால், தமது நாட்டின் வான் பாதுகாப்புப்பிரிவினர் அவற்றை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறினார்.
Also Read | தென்கொரியா விமான விபத்து… என்ன நடந்தது?
எனினும் ரஷ்யாதான் இந்த தாக்குதலை நடத்தியதா என்று எந்த அறிவிப்பையும் ரஷ்யா வெளியிடவில்லை. இதனிடையே ரஷ்யாதான் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று அமெரிக்கா சந்தேகம் எழுப்பியுள்ளது.
கடந்த 2022 முதல் நடந்து வரும் ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்ற சந்தேகம் உலக நாடுகளுக்கு வலுத்து வருகிறது. அத்தனை எளிதாக யாரிடமும் மன்னிப்பு கேட்காத புடின், அஜர்பைஜான் அதிபரிடம் மன்னிப்பு கோரியிருப்பது உலகளவில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
December 29, 2024 5:31 PM IST
உலக அரங்கை சந்தேகத்தில் ஆழ்த்திய புதினின் மன்னிப்பு.. அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விபத்தில் நடந்தது என்ன?