Last Updated:

Airbus A350, Boeing 787-9 மற்றும் Select A321 neo விமானங்களில் 10,000 அடி உயரத்திற்கு மேல் பறக்கும்போது பயணிகள் Wi-Fi மூலமாக இன்டர்நெட் கனெக்ஷனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News18

உள்ளூர் மற்றும் சர்வதேச விமானங்களில் வைஃபை சேவைகளை வழங்கும் முதல் விமான நிறுவனமாக ஏர் இந்தியா நிறுவனம் மாறி உள்ளது. Airbus A350, Boeing 787-9 மற்றும் Select A321 neo விமானங்களில் 10,000 அடி உயரத்திற்கு மேல் பறக்கும்போது பயணிகள் Wi-Fi மூலமாக இன்டர்நெட் கனெக்ஷனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பல்வேறு சாதனங்களை இணைப்பதற்கு அனுமதிக்கும் இந்த சேவை சாட்டிலைட் இணைப்பு மற்றும் அரசு விதிமுறைகள் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து அமையும். நியூயார்க் மற்றும் லண்டன் போன்ற சர்வதேச விமானங்களில் வெற்றிகரமான பைலட் புரோகிராமை நிறைவு செய்ததை அடுத்து இந்த முடிவை ஏர் இந்தியா நிறுவனம் எடுத்துள்ளது. இன்டர்நெட்டை பிரவுஸ் செய்வதற்கு ஏர் இந்தியாவின் இன் பிளைட் Wi-Fi சேவையை பயன்படுத்த பயணிகள் தங்களுடைய PNR மற்றும் கடைசிப் பெயரை என்டர் செய்ய வேண்டும்.

தங்களுடைய Wi-Fi சேவை குறித்து ஏர் இந்தியா நிறுவனம் கூறுவது என்ன?

“இந்த அறிமுக காலக்கட்டத்திற்கு Wi-Fi இலவசமாக வழங்கப்படும். மேலும், வரக்கூடிய நாட்களில் இது பிற விமானங்களிலும் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலமாக பயணிகள் பிரௌசிங், சோஷியல் மீடியாவை பயன்படுத்துதல், வேலைகள் குறித்த அப்டேட் அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் டெக்ஸ்ட் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபடலாம்” என்று டாட்டா குழும நிறுவனம் கூறியது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் சீஃப் கஸ்டமர் எக்ஸ்பீரியன்ஸ் அதிகாரியான ராஜேஷ் டோக்ரா ஒரு பிளாக் போஸ்டில் கூறியதாவது, “நவீன பயணத்தில் கனெக்டிவிட்டி என்பது தற்போது ஒரு முக்கியமான விஷயமாக அமைகிறது. ஒரு சிலருக்கு இது நிகழ்நேர பகிர்தல் பற்றிய ஒரு விஷயமாக இருந்தாலும், மற்றவர்களுக்கு இது அதிக பயனுள்ளதாக அமைகிறது. காரணம் என்னவாக இருந்தாலும் எங்களுடைய விருந்தாளிகளுக்கு இன்டர்நெட் இணைப்பை கொடுத்து, புதிய ஏர் இந்தியா அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று கூறினார்.

இதையும் படிக்க: 2025 ஜனவரியில் வெளியாகவுள்ள ஸ்மார்ட்ஃபோன்கள்… லிஸ்ட் இதோ…!

ஏர் இந்தியா விமானங்களில் Wi-Fi இணைப்பை பெறுவது எப்படி?

பின்வரும் படிகளைப் பின்பற்றி பயணிகள் ஏர் இந்தியா விமானங்களில் இன் ஃபிலைட் Wi-Fi சேவையை பயன்படுத்தலாம்.

  • முதலில் Wi-Fi ஆப்ஷனை எனேபிள் செய்துவிட்டு, ‘Wi-Fi செட்டிங்ஸ்’ (Wi-Fi Settings) ஆப்ஷனுக்கு செல்லுங்கள்.
  • இதில் ‘ஏர் இந்தியா வைஃபை’ (Air India Wi-Fi) என்ற நெட்வொர்க்கை தேர்வு செய்ய வேண்டும்.
  • உங்களுடைய சாதனத்தில் உள்ள டீஃபால்ட் பிரவுசர் இப்போது ஏர் இந்தியா போர்ட்டலுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.

இதையும் படிக்க: Chatbot, ChatGPT கிட்ட இந்த மாதிரி விஷயங்களை ஒரு போதும் கேட்காதீங்க… பிறகு பிரச்சனை உங்களுக்கு தான்!

  • இங்கு நீங்கள் உங்களுடைய PNR மற்றும் கடைசி பெயர் போன்ற விவரங்களை என்டர் செய்ய வேண்டும்.
  • Wi-Fi உடன் இணைக்கப்பட்டவுடன் பயணிகள் ஏர் இந்தியா விமானங்களில் தங்களுடைய இலவச இன்டர்நெட் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.



Source link