Last Updated:

பப்ளிக் வைஃபை நெட்வொர்க்குகள் எப்பொழுதும் பாதுகாப்பானவற்றையாக கருதப்படுகிறது. இதனால் ஹேக்கர்கள் அவர்களுடைய டார்கெட்டுகளை எளிதில் ஹேக் செய்து விடுகிறார்கள்

News18

பப்ளிக் வைஃபை நெட்வொர்க்குகள் எப்பொழுதும் பாதுகாப்பானவற்றையாக கருதப்படுகிறது. இதனால் ஹேக்கர்கள் அவர்களுடைய டார்கெட்டுகளை எளிதில் ஹேக் செய்து விடுகிறார்கள். இந்த நெட்வொர்க்குகள் மூலமாக சைபர் கிரிமினல்கள் மிக எளிதாக டேட்டாக்களை திருடி விடுகின்றனர். இதில் பாஸ்வேர்டுகள் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள் போன்ற முக்கியமான தகவல்கள் அடங்கும். எனவே இது குறித்த விழிப்புணர்வோடு இருப்பது பாதுகாப்பு நடவடிக்கைக்கான முதல் படியாக கருதப்படுகிறது.

வெர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்கை (VPN) பயன்படுத்துதல்

ஒரு VPN உங்களுடைய இன்டர்நெட் டிராஃபிக்கை என்கிரிப்ட் செய்து விடுவதால் பிறரால் அதனை படிக்க முடியாது. இது உங்களுடைய சாதனம் மற்றும் இன்டர்நெட் இடையே ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது. குறிப்பாக பப்ளிக் வைஃபை நெட்வொர்க்களை பயன்படுத்தும் பொழுது இது அவசியமாக கருதப்படுகிறது. பல்வேறு அளவுகளில் பாதுகாப்பு மற்றும் வேகத்தை வழங்கக்கூடிய பல VPN சேவைகள் உள்ளன. டு ஃபேக்டர் ஆதண்டிகேஷன் உங்களுடைய அக்கவுண்டுகளில் டு ஃபேக்டர் ஆதண்டிகேஷன் என்பது ஒரு கூடுதல் பாதுகாப்பு அடுக்காக செயல்படுகிறது. யாராவது உங்களுடைய பாஸ்வேர்டுகளை திருடிவிட்டால் கூட செகண்ட் ஃபேக்டர் இல்லாமல் உங்களுடைய அக்கவுண்ட்டை பயன்படுத்த முடியாது.

முக்கியமான தகவல்கள் பயன்படுத்துவதை தவிர்த்தல்

பப்ளிக் வைஃபை நெட்வொர்க்கில் உங்களுடைய யூசர் ஐடி, பாஸ்வோர்ட், கிரெடிட் கார்டு தகவல்கள் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். ஆன்லைன் பேங்கிங் அல்லது ஷாப்பிங் போன்றவற்றை செய்வதை தவிர்ப்பது நல்லது.

சாஃப்ட்வேரை அப்டேட் செய்தல்

வழக்கமான முறையில் சாஃப்ட்வேரை அப்டேட் செய்வதன் மூலமாக உங்களுடைய சாதனங்களுக்கு தேவையான பாதுகாப்பு கிடைக்கும். உங்களுடைய ஆபரேடிங் சிஸ்டம், பிரவுசர் மற்றும் அப்ளிகேஷன்கள் அனைத்தும் அப்டேட் ஆக இருக்க வேண்டும்.

ஃபைல் ஷேரிங் மற்றும் ஏர் ட்ராப்பை டிசேபிள் செய்தல்

ஏர் டிராப் போன்ற ஃபைல் ஷேரிங் அம்சங்கள் உங்களுடைய சாதனத்தை தேவையில்லாத இணைப்புகளுக்கு வெளிப்படுத்தக் கூடும். எனவே பப்ளிக் வைஃபை நெட்வொர்க்களை பயன்படுத்தும் பொழுது இந்த மாதிரியான அம்சங்களை டிசேபிள் செய்து வைத்து விடுங்கள். ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேர் ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேர் என்பது மால்வேருக்கு எதிராக உங்களுடைய சாதனத்தை பாதுகாக்கும். வைஃபை நெட்வொர்க்குக்குகள் மூலமாக வரக்கூடிய மால்வேரிலிருந்து உங்கள் சாதனத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு நல்ல தரமான ஆன்டி-வைரஸ் சாஃப்ட்வேர் போட்டுக் கொள்வது நல்லது.

இணைப்புகளை கண்காணித்தல்

நீங்கள் எந்த நெட்வொர்க்கோடு இணைத்து இருக்கிறீர்கள் என்பதில் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வைஃபை சேவைகளை வழங்கக்கூடிய லொகேஷனில் உள்ள ஊழியர்களிடம் நெட்வொர்க் பெயர்களை எப்பொழுதும் வெரிஃபை செய்து கொள்ளுங்கள். “ஃப்ரீ பை” அல்லது “பப்ளிக் நெட்வொர்க்” போன்ற பெயர்கள் கொண்ட நெட்வொர்க்குகள் மூலம் உங்கள் சாதனத்தை இணைப்பதை தவிர்த்து விடுங்கள்.

பப்ளிக் வைஃபை பயன்படுத்தும் பொழுது கூடுதல் எச்சரிக்கையோடும், சரியான கருவிகளை பயன்படுத்துவதும் நம்முடைய சாதனங்களை பாதுகாப்பாக வைக்கும். இந்த வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் வைஃபை நெட்வொர்க்கை பயன்படுத்துங்கள்.



Source link