இந்தியாவில் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் ஆன்லைன் சம்பந்தப்பட்ட மோசடிகளில் பலர் மாட்டிக் கொண்டு தவிக்கின்றனர். இது குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் பலர் அவர்களுடைய பணத்தையும், நிம்மதியையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே இந்த பதிவில் PAN கார்டு சம்பந்தமான மோசடியில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

நம்முடைய நாடு டிஜிட்டல் இந்தியாவாக மாறியது நமக்கு நிச்சயமாக பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயம்தான்.

விளம்பரம்

ஆனால் இந்த விஷயத்தை மோசடிக்காரர்கள் பலர் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்துவது மிகவும் வருத்தம் அளிக்கக் கூடியதாக இருக்கிறது. தற்போது தொடர்ந்து டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்து வருகின்றன.

Also Read: 
புதிய பான் கார்டு அறிமுகம்! பழைய பான் அட்டைகள் செல்லுபடியாகாதா? சந்தேகங்களுக்கு மத்திய அரசு விளக்கம்..!

மோசடி லோன் விண்ணப்பங்கள், கடனை தவறாக பயன்படுத்துதல் மற்றும் பிஷ்ஷிங் அட்டாக்குகள் போன்ற PAN கார்டு சம்பந்தப்பட்ட பல்வேறு மோசடிகள் இந்தியாவில் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இதிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிச்சயமாக எடுக்க வேண்டும். அவை என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

சந்தேகத்திற்குரிய வெப்சைட்டுகளில் ஒருபோதும் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை என்டர் செய்ய வேண்டாம். குறிப்பாக வங்கி விவரங்கள், லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் போன்றவற்றை என்டர் செய்யாதீர்கள். ஏனெனில் மோசடிக்காரர்கள் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை தவறாக பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

உங்களுடைய PAN கார்டை வழங்க கேட்கும் வெப்சைட் “http” என்று இல்லாமல் “https” என்று இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் இவ்வாறு இருக்கும் வெப்சைட் பாதுகாப்பானது அல்ல. இது போலியான வெப்சைட்.

விளம்பரம்

உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை அவ்வப்போது கண்காணிப்பது அவசியம். ஏதேனும் புதிய கடன் அக்கவுண்டுகள் திறக்கப்பட்டு இருக்கிறதா என்பதை கண்காணித்துக் கொண்டே இருங்கள். அது மட்டுமல்லாமல் ஃபார்ம் 26AS மூலமாக உங்களுடைய PAN கார்டு உடன் இணைக்கப்பட்டுள்ள ட்ரான்ஸாக்ஷன்கள் அனைத்தையும் நீங்கள் சரிபார்க்கலாம்.

இதையும் படிக்க:
தீபாவளிக்கு Flibkart-ல் சூப்பர் ஆஃபர்.. இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் தான்

ஒருவேளை நீங்கள் ஏதேனும் மோசடியில் மாட்டிக் கொண்டால் அது குறித்து புகார் அளிப்பது எப்படி என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

விளம்பரம்
  • வருமானவரித்துறையின் அதிகாரப்பூர்வ டேக்ஸ் இன்ஃபர்மேஷன் நெட்வொர்க் (Tax information network) போர்ட்டலுக்கு செல்லுங்கள்.

  • அங்கு கஸ்டமர் கேர் பிரிவில் உள்ள கம்ப்ளைன்ட்ஸ் / குவரீஸ் (Complaints / Queries) என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

  • ஸ்கிரீனில் தெரியக்கூடிய வழிமுறைகளை பின்பற்றி புகார் படிவத்தை சரியாக நிரப்புங்கள்.

  • இதன் மூலமாக நீங்கள் உங்களுடைய புகாரை எளிதாக பதிவு செய்யலாம். புகாரை பதிவு செய்வதற்கு நீங்கள் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆன்லைனிலேயே எளிதாக செய்து முடிக்கலாம்.

.



Source link