ஊடகங்களுக்கு தணிக்கை விதிக்கும் எண்ணம் புதிய அரசாங்கத்திற்கு இல்லை என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர், டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கை இலத்திரனியல் ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் ஊடக அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களும் அரசாங்கமும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டுமென அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் செயற்படக்கூடிய சூழலை உருவாக்கி ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை இலத்திரனியல் ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் அதிகாரிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ஊடகங்களுக்கு தணிக்கை விதிக்கும் எண்ணம் அரசிற்கு இல்லை appeared first on Daily Ceylon.