எலான் மஸ்க், அமெரிக்க அரசாங்கத்தின் ஆலோசனைக் குழுவில் இணைவதால், அவரது சமூக வலைதள பிளாட்ஃபார்மான எக்ஸ் (X) இனி எவ்வாறு இயங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்பு ட்விட்டர் என்ற பெயரில் நமக்கு பரிச்சயப்பட்ட பிரபல சமூக வலைதளத்தை வாங்கிய எலான் மஸ்க், பின்னர் அதன் பெயரை எக்ஸ் என மாற்றினார். எலான் மஸ்க்கிற்கு சொந்தமான எக்ஸ் (X) வலைதளத்தில் இருந்து தற்போது பெரும்பாலானோர் வெளியேறி வருகின்றனர்.

டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அரசாங்கத்துடன் மஸ்க்கை ஈடுபடுத்துவதால், எக்ஸ் தளம் பின்னடைவை எதிர்கொள்கிறது. இந்த மாற்றத்தால் எக்ஸ் (X) இனி எவ்வாறு இயங்கும் என்ற கவலையும் உருவாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி பலரையும் எக்ஸ் (X) தளத்தில் இருந்து வெளியேறவும் வைக்கிறது. இவ்வாறாக வெளியேற விரும்புபவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், உங்கள் X கணக்கை நீக்க இதுவே சரியான நேரம்.

விளம்பரம்

உங்கள் கணக்கை நிரந்தரமாக நீக்குவதற்கான நேரடி விருப்பத்தை இயங்குதளம் வழங்கவில்லை. எனினும், உங்கள் கணக்கை முதலில் தற்காலிகமாக செயலிழக்க செய்ய முடியும். உங்கள் X கணக்கை செயலிழக்கச் செய்வது உங்கள் கணக்கை நிரந்தரமாக நீக்குவதற்கான முதல் படியாகும். இவ்வாறாக உங்களது எக்ஸ் கணக்கை செயலிழக்கச் செய்யும் முயற்சியில், ஒருவேளை உங்களது மனது மாறி கணக்கை மீண்டும் தொடர விரும்பினால், அதற்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.

உங்கள் X கணக்கை செயலிழக்கச் செய்வதன் மூலம், உங்கள் பெயர் மற்றும் பிற பொதுவான சுய விவரத்தை X.com, ஐஓஎஸ்-க்கான X அல்லது ஆண்ட்ராய்டில் உள்ள X ஆப்களில் பார்க்க முடியாது.

விளம்பரம்

உங்கள் X கணக்கை செயலிழக்கச் செய்ய அல்லது நீக்க உதவும் வழிமுறைகள்

  • முதலில் உங்கள் X கணக்கில் உள் நுழையவும்.

  • X ஆப்பின் மேல் வலது மூலையில் உள்ள உங்கள் புகைப்படத்தை கிளிக் செய்யவும்

  • கீழ் தோன்றும் மெனுவிலிருந்து “அமைப்புகள் மற்றும் தனியுரிமை” (Settings and privacy) என்பதை தேர்வு செய்யவும்.

  • உங்கள் கணக்கு செட்டிங்குக்கு (account settings) செல்லவும்

  • அதில் கீழே சென்று, “உங்கள் கணக்கை செயலிழக்கச் செய் (Deactivate your account)” என்பதை கிளிக் செய்யவும்.

  • இந்த பட்டனை கிளிக் செய்தவுடன் X, உங்களது கணக்கை செயலிழக்கச் செய்வதை உறுதிப்படுத்தும்படி கேட்கும்.

  • இந்த செயல்முறையை வெற்றிகரமாக முடிக்க, உங்கள் கணக்குக்கான கடவுச்சொல்லை (account password) உள்ளிட வேண்டும்

  • தற்போது உங்கள் X கணக்கு செயலிழக்கப்பட்டிருக்கும்

இவ்வாறாக உங்களது கணக்கை செயலிழக்கச் செய்தபின், மற்றவர்கள் உங்கள் X கணக்கில் சென்று, உங்கள் போஸ்ட் மற்றும் ஃபாலோயர் என எதையும் இனி பார்க்க முடியாது. வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் உங்கள் எக்ஸ் கணக்கில் உள்நுழைவதன் மூலம், X ஆனது உங்கள் கணக்கை மீண்டும் செயல்படுத்துவதற்கான வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறது.

இதையும் படிக்க:
ரியல்மீ GT 7 ப்ரோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக ப்ரீ-புக்கிங் தொடங்கியது!

ஆனால் 30 நாட்கள் கால அவகாசத்திற்கு பிறகு, உங்கள் X கணக்கு நிரந்தரமாக நீக்கப்படும். இந்த 30 நாள் கால அவகாசத்திற்குள் நீங்கள், உங்கள் கணக்கில் உள்நுழையவில்லை என்றால், உங்கள் X கணக்கை நீங்கள் நிரந்தரமாக நீக்க விரும்புகிறீர்கள் என்பது எக்ஸ் வலைதளத்துக்கு தெரிவிக்கப்படும்.

விளம்பரம்

.



Source link