Last Updated:
Rohit Sharma: இதனால் ரோஹித் சர்மா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. பேட்ஸ்மேனாகவும் கடந்த 15 இன்னிங்ஸ்களில் 164 ரன்கள் மட்டுமே ரோஹித் எடுத்து இருக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு சிட்னியில் தொடங்கியுள்ள கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளையாடவில்லை.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். ஆனால் 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் ஒரு போட்டியில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
2 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னி நகரில் நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் பும்ரா தலைமையேற்ற முதல் டெஸ்டில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி 2 தோல்விகளையும், ஒரு மேட்சில் டிராவையும் சந்தித்தது.
இதனால் ரோஹித் சர்மா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. பேட்ஸ்மேனாகவும் கடந்த 15 இன்னிங்ஸ்களில் 164 ரன்கள் மட்டுமே ரோஹித் எடுத்து இருக்கிறார்.
இந்நிலையில் இன்று தொடங்கிய கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக பும்ரா மீண்டும் கேப்டனாகியுள்ளார். அவர் விலகுவதாக முன்பே தகவல் வெளியானாலும், அது உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், இன்றைய டாஸின்போது ரோஹித் சர்மா விலகல் அதிகாரப்பூர்வமானது. இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ரோஹித்துக்கு பதிலாக சுப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, இன்றைய டாஸில் வென்ற பும்ரா, பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து அவர் ஆடும் லெவன் குறித்து பேசும்பொழுது ரோஹித் சர்மா குறித்தும் பேசினார். அதில், “எங்கள் கேப்டன் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார். இந்த ஆட்டத்தில் ஓய்வெடுப்பதைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் எங்கள் கேப்டன் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினார்.
இது அணியில் உள்ள ஒற்றுமையைக் காட்டுகிறது. சுயநலம் இல்லை. அணியின் நலன் எதுவாக இருந்தாலும் அதைச் செய்ய நாங்கள் விரும்புகிறோம். இன்று அணியில் இரண்டு மாற்றங்கள். ரோஹித் ஓய்வு. அவருக்கு பதிலாக சுப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேபோல் காயம் காரணமாக ஆகாஷ் தீப் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக பிரசித் கிருஷ்ணா இடம்பெற்றுள்ளார்” என்றார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
January 03, 2025 6:30 AM IST