மெட்டாவுக்கு சொந்தமான பிரபல மெசேஜிங் ஆப்பான வாட்ஸ்அப், உலகளவில் கிட்டத்தட்ட மூன்று பில்லியன் செயலில் உள்ள யூசர்களைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், மே 2024 நிலவரப்படி, 535.8 மில்லியன் யூசர்களுடன், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான வாட்ஸ்அப் யூசர்களை இந்தியா கொண்டுள்ளது. இன்று கிட்டத்தட்ட 99% மொபைல் யூசர்களால் பயன்படுத்தப்படும் பிரபலமான உடனடி மெசேஜிங் ஆப்பாக வாட்ஸ்அப் உள்ளது. இது மக்களிடையே உள்ள இடைவெளியைக் குறைத்து, எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவர்களுடன் தொடர்பில் இருக்க அனுமதிக்கிறது.
சாதாரண மெசேஜிங் ஆப்பாக 2009இல் முதன்முதலில் தொடங்கப்பட்ட வாட்ஸ்அப், காலப்போக்கில் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் கொண்டுவந்தது. அதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம்தான் ஒருமுறை பார்க்கும் வசதி. பொதுவான பகிர்தலில் இருந்து மாறுபட்ட இந்த அம்சம், அனுப்பப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது வாய்ஸ் என எந்தவொரு மெசேஜையும் ஒருமுறை மட்டுமே பார்க்க அனுமதிக்கிறது. மேலும், ஒருமுறை பார்த்த பிறகு அவை மறைந்து போகும்.
ஆனால், இந்த அம்சம் நாம் நினைக்கும் அளவுக்கு பாதுகாப்பானது அல்ல என்று தகவல் வெளியாகி இருக்கிறது. வாட்ஸ்அப்பின் ஒருமுறை பார்க்கும் வசதியில் ஒரு கடுமையான குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது, இது யூசர் தனியுரிமையில் (privacy) சிக்கலை ஏற்படுத்துகிறது.
இதன் சிறப்பம்சமே, ஒருமுறை பார்த்த பிறகு மறைந்துவிடுவதுதான். மாறாக ஒருமுறை பார்த்த பிறகும் அந்த போஸ்ட் மறையாமல், மீண்டும் மீண்டும் பார்க்க முடிந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த பிரச்சனை ஐபோன்களில் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை பார்க்கும் வசதி
ஒருமுறை பார்க்கும் வசதியை ஐபோன் யூசர்கள் எவ்வாறு பார்க்க முடியும் என்பது பற்றி இங்கே பார்ப்போம்.
முதலில் வாட்ஸ்அப்பை திறந்து செட்டிங்ஸ் பகுதிக்கு செல்ல வேண்டும். அதில், ஸ்டோரேஜ் அண்ட் டேட்டா என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதில், மேனேஜ் ஸ்டோரேஜ் என்கிற விருப்பத்தை தேர்வு செய்து, கீழே சென்று ஒருமுறை பார்க்கும் பதிவை, உங்களுக்கு அனுப்பியவர்களின் தொடர்பை தேர்வு செய்ய வேண்டும். பின்னர், அதில் அவர்களின் பெயரை தேர்வு செய்து, அதில் புதிய மெசேஜை முதலில் காட்டு என்பதை தேர்வு செய்தால், ஒருமுறை பார்க்கும் வசதி மீண்டும் உங்களுக்கு கிடைக்கும்.
இதையும் படிக்க: Yuva Smart: புதிய என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ள லாவா நிறுவனம்!
இந்தக் குறைபாடு, குறிப்பாக முக்கியமான அல்லது தனிப்பட்ட தகவல்களைப் பகிர நினைக்கும் பயனர்களுக்கு சிக்கலைத் தருகிறது. இந்த அம்சத்தை நம்பி பகிரப்படும் தகவல், கடுமையான பிரைவசி சிக்கல்களுக்கு உள்ளாகலாம். இவ்வாறாக, ஒரு தடவையுடன் மறைந்துவிடும் நோக்கத்துடன் அனுப்பப்படும் தகவலை மீண்டும் மீண்டும் பார்க்க முடியும் என்பது முக்கிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. மேலும் மெட்டா, வாட்ஸ்அப்பின் இந்த பிரச்சனை குறித்து உரிய நடவடிக்கை எடுத்து இந்த சிக்கலை விரைவில் போக்க வேண்டும் என்று யூசர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிக்க: சிங்கப்பூர்: குழந்தைகளின் மொபைல் பயன்பாட்டை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை
எனவே, இந்த சிக்கல் சரிசெய்யப்படும் வரை, யூசர்கள் முக்கியமான தகவல்களை ஒருமுறை பார்க்கும் வசதி மூலம் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. ஒவ்வொருவரின் பிரைவசியும் முக்கியமானது என்பதால், இதுபோன்ற சிக்கல் குறித்து விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
January 28, 2025 7:45 PM IST