Last Updated:
உழைப்புக்கு பெயர் போன ஜப்பானில் எந்த வேலையும் செய்யாமல் ஆண்டுக்கு 69 லட்சம் ரூபாய் ஊதியம் பெற முடியும் என்றால் நம்ப முடிகிறதா. வாங்க விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
உழைப்புக்கு பெயர் போன ஜப்பானில் எந்த வேலையும் செய்யாமல் ஆண்டுக்கு 69 லட்சம் ரூபாய் ஊதியம் பெற முடியும் என்றால் நம்ப முடிகிறதா. வாங்க விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
ஜப்பானை சேர்ந்த ஷோஜி மோரிமோடோ (Shoji Morimoto) என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சரிவர பணிபுரியாததால் 2018 ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டார். அதன்பின் தன்னை தானே வாடகைக்கு விட்டு சம்பாதிக்கத் தொடங்கினார்.
பேச்சுத் துணைக்கு கூட ஆளில்லாமல் தனிமையில் தவிப்பவர்கள் மோரிமோடோவை வாடகைக்கு எடுத்து வருகின்றனர். வாடகைக்கு எடுப்பவர்களுடன் உரையாடுவது, வீடியோ காலில் பேசுவது, அவர்களுடன் துணைக்கு வெளியில் சென்று வருவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை ஒருவரிடம் செலவிட இந்திய மதிப்பில் 16 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக பெற்று வருகிறார்.
ஆண்டுதோறும் சுமார் ஆயிரம் அழைப்புகள் வரை ஏற்பதாகவும், 69 லட்சம் ரூபாய் ஊதியமாக பெறுவதாகவும் மோரிமோடோ தெரிவித்துள்ளார்.
January 11, 2025 3:38 PM IST