நடிகர் விஜயை தொடர்ந்து தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர் பார்த்திபன் தனது அரசியல் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் திரைப்படம், தொலைக்காட்சி தொடர்கள் படப்பிடிப்புக்கான கட்டணத்தை குறைத்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமியை நடிகர் பார்த்திபன் இன்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பார்த்திபன், தனுஷ்- நயன்தாரா மோதல் இந்தியா கிரிக்கெட் மேட்ச் போன்று சுவாரஸ்யமாக இருப்பதாகத் தெரிவித்தார். அதனை பார்வையாளராக இருந்து ரசிப்பதாகவும் கூறினார்.

விளம்பரம்

மேலும், தமிழ் சினிமா நட்சத்திரங்கள் இடையே விவாகரத்து அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது என்றும், ஏ.ஆர்.ரகுமானுக்கு இசையைத் தவிர வேறு எதுவும் தெரியாது, அவர் நல்ல மனிதர் என மனைவியே சான்றிதழ் கொடுத்துள்ளார் என்றும் குறிப்பிட்டார் பார்த்திபன்.

தொடர்ந்து, பிரமாதமான அரசியல் எழுச்சி பெற்றுள்ள விஜய், திமுகவை எதிர்ப்பதுதான் சரி என்றும் பார்த்திபன் கருத்து தெரிவித்தார்.

Also Read | Vijay | ரூ.300 கோடி வசூல்… 12 வருஷம் 2 மாதம் கழித்து விஜய் கூப்பிட்டு வாழ்த்திய பிரபலம்!

அதற்கு உதாரணம் கொடுத்த பார்த்திபன், எம்ஜிஆர் ஆளும் கட்சியை எதிர்த்தே அரசியலில் வென்றார். ஆளும் கட்சியை எதிர்த்தால்தான் ஹீரோவாக முடியும். எனவே விஜய் திமுகவை எதிர்ப்பதில் தவறு இல்லை என்றும் கூறினார்.

அரசியல் பேச்சை பேசிக்கொண்டிருக்கும்போதே தனது அரசியல் ஆசையையும் வெளிப்படுத்தினார் நடிகர் பார்த்திபன். அதில், எனக்கும் அரசியலில் ஆர்வமுண்டு. அரசியல் கட்சித் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருப்பதால், ஒருநாள் கட்சியை ஆரம்பிப்பேன் என்றும் ஆனால், 2026 தேர்தலில் அல்ல என்றும் வெளிப்படுத்தினார்.

விளம்பரம்

.



Source link