தென்கொரியாவில் ராணுவ ஆட்சியை மீண்டும் அமல்படுத்த மாட்டேன் என்றும் என்னை மன்னித்து விடுங்கள் எனவும் அந்நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) கூறியுள்ளார்.
தென் கொரியாவில், அடுத்தாண்டு தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கை மசோதா குறித்து ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் தொடர் மோதல் போக்கு நிலவியது. எதிர்க்கட்சிகள் நாட்டின் நிர்வாகத்தை குறுக்கீடு செய்வதாகவும், வடகொரியாவுக்கு ஒத்துழைப்பு தருவதாகவும் குற்றஞ்சாட்டி, அதிபர் யூன் சுக் இயோல் கடந்த செவ்வாயன்று, திடீரென ராணுவச் சட்டத்தை அமல்படுத்தினார்.
அதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, 6 மணி நேரத்திற்குள்ளாக அதனை திரும்பப் பெறுவதாக, அதிபர் யூன் சுக் இயோல் அறிவித்தார்.
Also Read | காதலனை சூட்கேஸில் அடைத்து கொலை செய்த காதலி.. காரணம் என்ன?
இந்த நிலையில், தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய யூன் சுக் இயோல், ராணுவ ஆட்சியை மீண்டும் அமல்படுத்த மாட்டேன் என்றும் தனது அறிவிப்பு பொதுமக்களை கவலையை ஏற்படுத்தியதற்கு உண்மையில் வருந்துகிறேன் எனவும் கூறினார்.
நாட்டின் எதிர்கால நிர்வாகத்திற்கு தனது கட்சியும் அரசும் பொறுப்பேற்றுக் கொள்ளும் அவர் என்றும் கூறியுள்ளார்.
.