பெரும் சர்ச்சைக்கு மத்தியில் வெளியாகியுள்ள நயன்தாராவின் கல்யாண வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும், பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனும் 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
Also Read:
நயன்தாரா நடிப்பில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த படங்கள்.. எந்தெந்த OTT-யில் பார்க்கலாம்? முழு விவரம்!
சென்னை அருகே மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் பிரமாண்டமாக நடந்த திருமணத்தில் முக்கியமான திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
திருமணத்தின் போது அது குறித்து வீடியோ வெளியாகாத நிலையில், திருமண நிகழ்வுடன் சேர்த்து, நயன்தாரா – விக்னேஷ் சிவனின் காதல் வாழ்க்கை, ‘‘Nayanthara: Beyond the Fairytale’’ என்ற பெயரில் ஆவணப்படமாக தயாரானது.
2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஆவணப்படம் வெளியாகாததற்கு, ‘‘நானும் ரவுடிதான்’’ படத்தின் காட்சிகளை பயன்படுத்த, அந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ் அனுமதிக்கவில்லை என நயன்தாரா குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், டிரைலரில் 3 நொடி காட்சியை பயன்படுத்தியதற்கு தனுஷ் 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்த நயன்தாரா, தனுஷை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த விவகாரத்தில் தனுஷ் மற்றும் நயன்தாரா இருவருக்கும் ஆதரவாக பல்வேறு தரப்பினர் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நயன்தாராவின் கல்யாண வீடியோ வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க – Kantara – A Legend : காந்தாரா 2 படத்தின் ரிலீஸ் தேதி… ஹோம்பலே ஃபிலிம்ஸ் அறிவிப்பு…
இதைப் பார்த்த ரசிகர்கள் #NayantharaBeyondTheFairytale என்ற ஹேஷ்டேக்கின் கீழ் கருத்துக்களை கூறி வருகிறார்கள். குறிப்பாக எக்ஸ் தளத்தின் Netflix India கணக்கிலிருந்து நயன்தாராவின் கல்யாண வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதில் நெட்சன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
Namma ellarum aavala kaathutrundha namma lady superstar- oda kadhai, ippo Netflix la vandhaachu! ❤️
Watch Nayanthara: Beyond The Fairytale, only on Netflix! pic.twitter.com/J6HH3C6arf— Netflix India South (@Netflix_INSouth) November 17, 2024
Watch Nayanthara: Beyond The Fairytale, only on Netflix! Its all ours Now🫶🏻✨ https://t.co/nVjqvnnYxm
— Nayanthara✨ (@NayantharaU) November 17, 2024
ஒட்டுமொத்த அளவில் எதிர்பார்த்த அளவு வரவேற்பை நயன்தாரா கல்யாண வீடியோ பெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
.