பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த எம்.எஸ்.உதுமாலெப்பையை வரவேற்று  பாரிய  நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபையின் அட்டாளைச்சேனை கிளை,ஏற்பாடு செய்த இந்நிகழ்வு அண்மையில் (23) இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை ஜம்இயதுல் உலமா சபையின் தலைவர் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் யூ.எம்.நியாஸ் தலைமையில்   இடம்பெற்ற இந்நிகழ்வில்,  பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெவ்வை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வின்போது முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், சம்மாந்துறை பிரதேச செயலாளர்  எஸ்.எல்.எம்.ஹனீபா, அட்டாளைச்சேனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான  ஏ.எல்.ஹனீஸ் உள்ளிட்ட துறைசார் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

இதன்போது குறித்த சபையினரால் பாராளுமன்ற உறுப்பினருக்கு வாழ்த்துப் பத்திரம் வாசித்து வழங்கப்பட்டதுடன், பொன்னாடைகளும்  போர்த்தப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர் கடந்த காலங்களில் கிழக்கு மாகாண அமைச்சராக செயற்பட்டபோது இன, மத பேதமின்றி பல்வேறான அபிவிருத்திப் பணிகள் மேற்கொண்டது பற்றியும், சமூகம் சார் பல்வேறு வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியது தொடர்பிலும் பிரஸ்தாபித்து துறைசார் முக்கியஸ்தர்கள்  உரை  நிகழ்த்தியதுடன்,  விஷேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

The post எம்.எஸ்.உதுமாலெப்பை எம்.பிக்கு அட்டாளைச்சேனையில் பாராட்டு appeared first on Thinakaran.



Source link