Last Updated:
தொழில்நுட்பம் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்து வரும் பிரபல டிப்ஸ்டரான இவான் பிளாஸ், ஆப்பிளின் வரவிருக்கும் சில தயாரிப்புகள் பற்றிய சில முக்கிய குறிப்புகளை தெரிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் ஏர் மாடலின் புதிய வெர்ஷன் எம்3 சிப்செட்டுடன் 11-இன்ச் மற்றும் 13-இன்ச் டிஸ்ப்ளே விருப்பங்களில் இந்த ஆண்டு விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம், கடந்த ஆண்டு மே மாதம் நடந்த ‘லெட் லூஸ்’ நிகழ்வில் எம்2 சிப் உடன் கூடிய ஐபேட் ஏர் வரிசையை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், நிறுவனம் அதன் அடுத்த தலைமுறை ஐபேட் ஏரை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
ஆப்பிள் தரப்பில் இருந்து, இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதுவும் வெளியாகாத நிலையில், பரவி வரும் ஒரு புதிய தகவல் ஆப்பிளின் அடுத்த தலைமுறை ஐபேட் ஏர் குறித்த பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை தெரிவிக்கிறது. அதில் குறிப்பாக, புதிய ஐபேட் ஏருக்கு வைக்கப்பட இருக்கும் சில சாத்தியமான பெயர்கள், அதன் டிஸ்ப்ளே அளவுகள் மற்றும் பிராசசர்கள் போன்றவை அதில் இடம் பெற்றிருக்கிறது. அதன் முந்தைய மாடல்களைப் போலவே, புதிய ஐபேட் ஏர் தொடரும் 11-இன்ச் மற்றும் 13-இன்ச் டிஸ்ப்ளே அளவுகளில் வரும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், ஆப்பிள் அதன் அடுத்த ஐபேட் ஏர் மாடலில் மேம்பட்ட செயல்திறனுக்காக எம்4 சிப்செட்டை கொண்டுவர இருப்பதாக முன்னதாக தகவல் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபேட் ஏர் வரிசை
தொழில்நுட்பம் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்து வரும் பிரபல டிப்ஸ்டரான இவான் பிளாஸ், ஆப்பிளின் வரவிருக்கும் சில தயாரிப்புகள் பற்றிய சில முக்கிய குறிப்புகளை தெரிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கொண்ட இவான் பிளாஸ், ஆப்பிள் தற்போது 11-இன்ச் மற்றும் 13-இன்ச் டிஸ்ப்ளே விருப்பங்களுடன் இரண்டு புதிய ஐபேட் ஏர் மாடல்களை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், அவை எம்3 சிப்செட்டுன் கூடிய பிராசசரைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இவரது இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில், இது எம்2 சிப்செட்டில் இயங்கும் தற்போதைய ஐபேட் ஏர் வரிசையிலிருந்து ஒரு படி மேலாக இருக்கும். ஆனால், ஆப்பிள் ஐபேட் ஏர் வரிசையில் எம்3 சிப்பைத் தவிர்த்து, நேரடியாக எம்4 சிப்பை கொண்டு வர இருப்பதாக முன்னதாக வதந்திகள் பரவி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இவான் பிளாஸ் பகிர்ந்து கொண்ட தகவலில், ஐபோன் எஸ்இ 4 மற்றும் ஐபேட் 11 பற்றிய சில குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. அதன்படி, ஆப்பிள் அவற்றை ஐபேட் ஏர் (எம்3) உடன் அறிமுகப்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு மே மாதம் அதன் லெட் லூஸ் நிகழ்வில், ஐபேட் ஏர் மாடலை எம்2 சிப்புடனும், ஐபேட் ப்ரோ மாடலை எம்4 சிப்புடனும் அறிமுகப்படுத்தியது. அதேநேரத்தில், புதிய ஆப்பிள் பென்சில் ப்ரோ மற்றும் மேஜிக் கீபோர்டையும் ஆப்பிள் அறிமுகப்படுத்தி இருந்தது. இதில், ஐபேட் ஏர் 10.9-இன்ச் மற்றும் 13-இன்ச் டிஸ்ப்ளே விருப்பங்களில் லிக்விட் ரெடினா எல்சிடி (LCD) டிஸ்ப்ளேவுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. இது ஐபேட் ஓஎஸ் 17 -இல் இயங்குகிறது.
மேலும், 12-மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, வை-ஃபை 6இ (Wi-Fi 6E) மற்றும் புளூடூத் 5.3 கனெக்ட்டிவிட்டி ஆகியவற்றையும் கொண்டிருந்தது. மேலும், இது சார்ஜிங் மற்றும் டேட்டா டிரான்ஸ்பருக்கு ஏற்ற வகையில் 20W யூஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் வருகிறது. இந்தியாவில் இந்த ஐபேட் ஏர் (2024) 11-இன்ச் மாடலின் விலை ரூ. 59,900 இல் தொடங்குகிறது.
January 26, 2025 5:43 PM IST