Last Updated:

அமெரிக்காவுக்கு மிகவும் திறமையானவர்கள் தேவை என்பதால் H-1B விசாவை நிறுத்த விரும்பவில்லை என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறி உள்ளார்.

News18

இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் பல்வேறு துறைகளில் பணியாற்ற H1B விசா வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுவதாகவும், அதனால் H1B விசாவை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்தது.

அமெரிக்க அதிபராக 2 ஆவது முறையாக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இந்த பிரச்னையில் என்ன முடிவெடுக்க போகிறார் என்ற கலக்கத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் இருந்து வந்தனர்.

விசாவில் வரும் தம்பதிக்கு அமெரிக்காவில் குழந்தை பிறந்தால் அதற்கு வழங்கப்படும் குடியுரிமை ரத்து செய்யப்பட்டது கூடுதல் கவலையை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், அவர்கள் நிம்மதி மூச்சுவிடும் வகையில், அமெரிக்காவுக்கு மிகவும் திறமையான பணியாளர்கள் வருவதை தாம் விரும்புவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் ஆரக்கிள், சாப்ட்பேங்க், OpenAI உள்ளிட்ட நிறுவனங்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு இதை அவர் தெரிவித்தார். டெஸ்லா சி.இ.ஓ. எலான் மஸ்க் உள்ளிட்டோர் H-1B விசா திட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்ததால் ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.



Source link