நாட்டில் தற்போது நிலவும் மிகமோசமான  சீரற்ற வானிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக,  தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில், எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

The post எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு appeared first on Thinakaran.



Source link