Last Updated:
LIC: எல்ஐசியில் கிளைம் செய்யப்படாத தொகையை பெறுவது எப்படி? என்பது பற்றி தெரிந்துகொள்ளலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி., சமீபத்தில் ஒரு தகவலை வெளியிட்டு பொதுமக்களையும், வாடிக்கையாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது 2023-24 நிதியாண்டில், மேச்சுரிட்டி காலத்திற்குப் பிறகும் கிட்டத்தட்ட ரூ.880.93 கோடிகள் திரும்பப் பெறப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு, நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் இந்த தகவலை பகிர்ந்து கொண்டார். அதாவது, 2024 ஆம் நிதியாண்டில் எல்ஐசியில் சுமார் 3.72 லட்சம் பாலிசிதாரர்கள் தங்கள் மேச்சுரிட்டி தொகையை திரும்பப் பெறவில்லை என்று கூறியுள்ளார்.
எல்ஐசி இந்த தகவலை வெளியிட்ட பிறகு உங்கள் பாலிசியைப் பெறவில்லை என்பதை நீங்கள் உணர்ந்தால், உடனடியாக அதைச் சரிபார்த்து, எல்.ஐ.சி-யிடமிருந்து உங்கள் பணத்தையும் திரும்பப் பெறுங்கள்.
ஆண்டு வாரியாக கிளைம் செய்யப்படாத மேச்சுரிட்டி கிளைம் டேட்டா:
- 21-22 நிதியாண்டில் ரூ.652 கோடி
- 22-23 நிதியாண்டில் ரூ.897 கோடி
- 23-24 நிதியாண்டில் ரூ.880.93 கோடி
நீண்ட காலமாக கிளைம் செய்யப்படாத தொகைகளுக்கு என்ன நடக்கும்?:
உங்கள் பாலிசி தொகை 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிளைம் செய்யப்படாமல் இருந்தால், அந்தத் தொகை மூத்த குடிமக்கள் நல நிதிக்கு (SCWF) மாற்றப்படும். இந்த நிதி ஆனது மூத்த குடிமக்கள் நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) சுற்றறிக்கையின்படி, அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும், தங்கள் இணையதளத்தில் கிளைம் செய்யப்படாத ரூ.1,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை பற்றிய தகவலைக் காண்பிக்க வேண்டும் என்று கட்டாயமாகியுள்ளது.
ஏன் தொகை கிளைம் செய்யப்படாமல் உள்ளது?:
கிளைம் செய்யப்படாத தொகைக்கு பின்னால், வழக்குகள், ரிவல் கிளைம்ஸ், பாலிசிதாரர்களை தொடர்பு கொள்ளாதது, வெளிநாட்டில் வசிப்பது அல்லது ஓய்வூதியம் அல்லது வருடாந்திர கோரிக்கைகளில் தாமதம் போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.
எல்ஐசி இணையதளத்தில் தெரிந்து கொள்வது எப்படி?:
- LIC அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும் – https://licindia.in/homeStep
- ஹோம் பேஜ்-இல் உள்ள “கஸ்டமர் சர்வீஸ்” செக்ஷன்-ஐ கிளிக் செய்யவும்.
- அன்கிளைம்டு அமௌன்ட்ஸ் ஆஃப் பாலிசிஹோல்டர்ஸ் என்ற ஆப்ஷன்-ஐ செலக்ட் செய்யவும்.
- பாலிசி எண், பெயர், பிறந்த தேதி மற்றும் பான் கார்டு எண் போன்ற தேவையான விவரங்களை என்டர் செய்யவும்.
- பின்னர் சப்மிட் என்பதைக் கிளிக் செய்யவும்.
எல்ஐசியில் கிளைம் செய்யப்படாத தொகையை எவ்வாறு கிளைம் செய்வது?:
- எல்ஐசி அலுவலகத்திலிருந்து கிளைம் ஃபார்ம்-ஐ பெறவும் அல்லது எல்ஐசி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்யவும்.
- பாலிசி டாக்குமெண்ட், பிரீமியம் ரெசிப்ட்ஸ் மற்றும் டெத் சர்டிஃபிகேட் (தேவைப்பட்டால்) போன்ற தேவையான டாக்குமெண்ட்களைச் கலெக்ட் செய்யவும்.
- பூர்த்தி செய்யப்பட்ட ஃபார்ம்-ஐ அருகிலுள்ள எல்ஐசி அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்.
- இதனையடுத்து எல்ஐசி ஆனது உங்கள் கோரிக்கையை செயல்படுத்தும்.
எல்.ஐ.சி.யின் நடவடிக்கைகள்:
அன்கிளைம்டு மற்றும் பெண்டிங் கிளைம்களை குறைக்க எல்ஐசி பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்காக விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு பிரிண்ட் மற்றும் டிஜிட்டல் மீடியாக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
நீங்கள் எல்ஐசி பாலிசி எடுத்திருந்தால், உங்கள் பாலிசி ஸ்டேட்டஸ்-ஐ தவறாமல் சரிபார்க்கவும். இதன் மூலம், நீங்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், தேவைப்படும் நேரத்தில் அதைப் பயன்படுத்தவும் முடியும். எல்ஐசியின் இந்த முன்முயற்சியானது பாலிசிதாரர்கள் தங்கள் நிதிப் பலன்களுக்குத் தகுதி பெற உதவுகிறது. மேலும் இந்த செயல்முறையை எளிதாக்குகிறது.
January 03, 2025 12:57 PM IST
LIC: எல்ஐசியில் கிளைம் செய்யப்படாத தொகையை பெறுவது எப்படி? பணத்தை சரிபார்ப்பதற்கான வழிமுறை இதோ!