பிரபல சின்னத்திரை நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் மரணம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நேத்ரன் என்கிற இவரின் பெயர் ரசிகர்களுக்கு அவ்வளவு பரிட்சயம். மருதாணி சீரியலில் தொடங்கி 25 ஆண்டுகளாக சின்னத்திரையில் நடித்து வருகிறார். சீரியலை போலவே, ரியாலிட்டி ஷோக்களிலும் அதிகமாக பங்கேற்றார். இது நேத்ரனை மக்கள் மத்தியில் ஈஸியாக கொண்டு சேர்த்தது. பல ஆண்டுகளுக்கு முன்பே விஜய் டிவியின் டான்ஸ் ஷோக்களில் நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருடன் பங்கேற்றிருந்தார்.

தற்போது, விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, பொன்னி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து இருப்பவர் யுவன்ராஜ் நேத்ரன். அவரது மனைவி தீபா முருகனும் பிரபல சீரியல் நடிகைதான். இருவரும் சீரியல்களில் நடிக்கும்போது காதல் திருமணம் செய்துகொண்டனர்.

விளம்பரம்

இந்த தம்பதிக்கு இரு மகள்கள். திருமணத்துக்கு பிறகு மனைவி தீபா நடிப்பதை நிறுத்திவிட, நேத்ரன் மட்டுமே நடித்து வந்தார். இந்த நிலையில் தான் அவரின் மரண செய்தி வெளிவந்து திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

நேத்ரனுக்கு என்ன ஆச்சு?

ஆரம்ப கட்டங்களில் நல்ல உடல்வாகுடன் இருந்த நேத்ரன் சமீப காலங்களில் மிகவும் ஒல்லியாக மாறிப்போனார். ஆறு மாதங்களுக்கு முன் நேத்ரனின் இரண்டாவது மகள் அபிநயா, நேத்ரனுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டதாக தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட பதிவில், “அப்பாவின் உடல் நிலை கடந்த சில வாரங்களாகவே சரியில்லை. அவருக்கு புற்றுநோய் உறுதியாகியுள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்த பின்னும் சரியாகவில்லை. காரணம், நுரையீரலில் சில சிக்கல் உள்ளன. எல்லாம் கையை மீறி போன நிலைக்கு தந்தையின் உடல்நிலை வந்துள்ளது. மக்களாகிய உங்களின் பிரார்த்தனை அப்பாவுக்காக வேண்டும்.” என்று உருக்கமாக கலங்கியபடி தெரிவித்திருந்தார்.

விளம்பரம்

இந்த நிலையில் நேற்று நேத்ரனின் மரணம் நிகழ்ந்துள்ளது. தீவிர சிகிச்சைக்கு பின் நேத்ரன் மீண்டு வந்தாலும் அவரின் உடல்நிலை சரியாகவில்லை. மேலும் மோசமடைய தற்போது இயற்கை எய்தியுள்ளார். தமிழ் சின்னத்திரை உலகில் நேத்ரனின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

.



Source link