கடந்த ஆண்டு வெளியான படங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த படங்களில் ஒன்று வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை பார்ட் 1. இப்படத்தில் சூரி கதையின் நாயகனாகவும்வாத்தியாராக விஜய் சேதுபதியும் நடித்திருந்தனர். மேலும் கவுதம்மேனன், இளவரசு, ராஜிவ் மேனன், சேட்டன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து விடுதலை பாகம் இரண்டு (வருகின்ற 20ஆம் தேதி) நாளை வெளியாகிறது. இப்படத்தில் கூடுதலாக மஞ்சு வாரியர், அனுராக் காஷ்யப், கென் கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிறது என்றால், கண்டிப்பாக அது சமூகத்தில் உள்ள பிரச்சனையையும் பேசும் எனபது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அப்படி மக்களுக்கு எதிராகச் செயல்படும் அதிகாரம் குறித்தும், அதனை எதிர்த்துப் போராடுவதைக் குறித்தும் பேசிய படம் விடுதலை பாகம் ஒன்று. தற்போது பாகம் இரண்டு எவ்வாறு இருக்க போகின்றது என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
மேலும் சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் ட்ரெய்லரில் வன்முறை எங்க மொழி இல்லை. ஆனா எங்களுக்கு அந்த மொழியும் பேசத் தெரியும் என்ற வசனமும் தத்துவம் இல்லா தலைவர்கள் ரசிகர்கள மட்டும்தான் உருவாக்குவாங்க… அது முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது என்ற அரசியல் வசனங்களும் கவனம் ஈர்த்திருந்தன.
இதையும் வாசிக்க : ரூ.60 ஆயிரம் சம்பளம்… நெல்லை அரசு மருத்துவமனையில் சூப்பர் வேலை..!!
மேலும் இதுபோல படத்தில் அழுத்தமான அரசியல் வசனங்களும், காட்சிகளும், கருத்துகளும் இடம் பெற்றிருக்கும் என்பதால் ரசிகர்கள் விடுதலை பாகம் இரண்டை திரையில் காண ஆர்வமாக இருக்கின்றனர். முதல் பாகத்தில் சூரிக்கு அதிக காட்சிகளும், விஜய் சேதுபதிக்கு குறைவான காட்சிகளும் இடம் பெற்று இருக்கும். தற்போது இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் பிளாஸ் பேக் என்பதால் விஜய் சேதுபதிக்கு அதிக காட்சிகள் இருப்பது ட்ரெய்லரை பார்க்கும் போது நமக்கு தெரிகின்றது.
முதல் பாகத்தில் இளையராஜாவின் இசையில் வெளியான அனைத்து பாடல்களுமே வேற லெவல் ஹிட். அதேபோல் சமீபத்தில் இரண்டாம் பாகத்தின் பாடல்கள் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. பொதுவாக இயக்குனர் வெற்றிமாறன் ஒரு நடிகரை வைத்து இயக்குகிறார் என்றால், அந்த நடிகருக்கு படம் வேற லெவல் ஹிட் அடித்து விடும். சூரி கதாநாயகனாக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே வெற்றிமாறன் இயக்கி சூரியை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக ஆகிவிட்டார்.
நேற்று இப்படம் சென்சார் செய்யப்பட்டு படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. படம் மொத்தம் 2 மணி நேரம் 52 நிமிடங்கள் ஓடும் எனவும் தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் சென்சார்டு போர்டு அரசு, அரசாங்கங்கள், தேசிய இன விடுதலை உள்ளிட்ட வார்த்தைகளை மாற்றியிருக்கிறது.மேலும் வட்டார வழக்கு வார்த்தைகள் எல்லாம் மியூட் செய்யப்பட்டிருக்கிறது.
குறிப்பாக முதல் பாகத்தில் வெற்றிமாறன் சூரியை எவ்வாறு நடிக்க வைத்து இருந்தார் என்பதை பார்த்தோம், தற்போது இரண்டாம் பாகத்தில் விஜய்சேதுபதியை எவ்வாறு நடிக்க வைத்து இருக்கிறார் என்பதை டிசம்பர் 20 ஆம் தேதி பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.