அந்த வகையில் ஃபிக்ஸட் டெபாசிட் எனப்படும் FD திட்டங்கள் பல்வேறு மக்களின் நம்பகமான முதலீட்டு விருப்பமாக உள்ளன. உத்தரவாதமான வருமானத்துடன் கூடிய பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாக எப்போதுமே FDக்கள் இருந்து வருகின்றன. பலரும் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் வழங்கும் FD-க்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.

பெரிய அளவிலான ஒரு தொகையை குறிப்பிட்ட கால அளவில் முதலீடு செய்து, அதற்கான நிர்ணயிக்கப்பட்ட வட்டியை FD திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். பொதுவாக இது 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான கால அளவைக் கொண்டிருக்கும். வட்டி விகிதமானது வங்கி, டெபாசிட் தொகை மற்றும் தேர்வு செய்யும் மெச்சூரிட்டி பீரியட் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். எனவே, நீங்கள் FD திட்டங்களில் முதலீடு செய்ய நினைத்தால் புத்திசாலித்தனமான முடிவை எடுக்க வேண்டும்.

நீங்கள் FD திட்டங்களில் முதலீடு செய்யும் யோசனையைக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், வங்கியிலா? அல்லது தபால் நிலையத்திலா? இரண்டில் எதில் வழங்கப்படும் FD திட்டங்களை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் முடிவெடுக்க உதவும் வகையில் தபால் அலுவலகம் மற்றும் SBI வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு இடையிலான ஒப்பீடை இங்கே பார்க்கலாம்.

5 ஆண்டு FD திட்டங்களில் முதலீடு செய்தால் கிடைக்கும் வருமானம்…

நீங்கள் 5 ஆண்டுகள் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட FD-யில் முதலீடு செய்ய விரும்பினால், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 6.5 சதவீத வட்டி வருமானத்தை வழங்கும். அதே சமயம், இதே மெச்சூரிட்டி பீரியட்டிற்கு போஸ்ட் ஆஃபிஸ் சுமார் 7.5 சதவீத வட்டி வருமானத்தை வழங்குகிறது.

இதையும் படிக்க: EPFO விதிகளில் ஒரு பெரிய மாற்றம்: உங்கள் PF கணக்கை ஆன்லைனில் புதிய முதலாளிக்கு மாற்றுவது எப்படி…?

SBI-யில் 5 வருட FD-யில் முதலீடு செய்தால் கிடைக்கும் வருமானம்

உதாரணமாக, நீங்கள் ரூ.3,50,000-ஐ இந்த திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டால் ஆண்டுக்கு 6.50 சதவீதம் வட்டி வீதம் 5 ஆண்டுகளுக்கு பிறகு மொத்தமாக சுமார் ரூ.4,83,147 கிடைக்கும். 5 ஆண்டுகளில் தோராயமாக ரூ.1,33,147வருமானம் கிடைக்கும்.

அதே நேரம் நீங்கள் இதே ரூ.3,50,000-ஐ போஸ்ட் ஆஃபிஸ் வழங்கும் FD-யில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 7.50 சதவீத வட்டி வீதம் 5 ஆண்டுகளுக்கு பிறகு மொத்தமாக சுமார் ரூ.5,07,482 கிடைக்கும். 5 ஆண்டுகளில் தோராயமாக ரூ.1,57,482 வருமானம் கிடைக்கும். எனவே, SBI-ஐ விட அதிக லாபத்தை போஸ்ட் ஆஃபிஸ் வழங்குவது இதன் மூலம் தெரிகிறது.



Source link