சாம்சங்கின் புதிய பிரீமியம் ஆண்ட்ராய்டு டேப்லெட்டுகள் மீடியாடெக் சிப்செட், ஏஐ தொழில்நுட்பம் மற்றும் எஸ் பென்னுடன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி டேப் எஸ்10 சீரிஸ் டேப்லெட்களை இந்த வாரம் சந்தையில் வெளியிட்டது, இந்த ஆண்டு பிளஸ் மற்றும் அல்ட்ரா மாடல்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலக்கட்டத்தில் மக்கள் சிறிய டிஸ்ப்ளே கொண்ட டேப்லெட்களைப் பயன்படுத்துவதில்லை என முடிவு செய்துள்ள நிறுவனம், இந்த ஆண்டு அதன் அடிப்படை மாடலை 12.4 இன்ச் டிஸ்ப்ளேவுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.
மீடியாடெக் மீதுள்ள நம்பிக்கையால் சாம்சங், தனது அனைத்து சாதனங்களிலும் மீடியாடெக் சிப்செட்டையே பயன்படுத்தி வருகிறது. மேலும் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரீமியம் டேப்லெட்டுகளிலும் மீடியாடெக் சிப்செட் மற்றும் கேலக்ஸி ஏஐ தொழில்நுட்பத்தின் சிறப்பம்சங்களையும் பெற முடியும்.
இதையும் படிக்க:
நம்பமுடியாத பிரீபெய்டு ஆஃபர் வெளியிட்ட Jio… வாடிக்கையாளர்கள் குஷி
இந்திய சந்தையில் இதன் விலை: 256 ஜிபி மற்றும் ஒய்ஃபை ஆதரவு மட்டுமே கொண்ட கேலக்ஸி டேப் எஸ்10 சீரிஸின் அடிப்படை மாடலின் விலை ரூ.90,999 இல் தொடங்குகிறது. 5ஜி 256 ஜிபி டேப் எஸ்10 பிளஸின் விலை ரூ.1,04,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒய்ஃபை 256 ஜிபி உடன் கூடிய கேலக்ஸி டேப் எஸ்10 அல்ட்ராவின் விலையானது ரூ.1,08,999 ல் தொடங்குகிறது, இதன் 5G 512 ஜிபி மாடலுக்கு ரூ.1,33,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறந்த டீலைப் பெற உதவும் சில அற்புதமான முன்கூட்டிய ஆர்டர்களுக்கு தள்ளுபடிகளும் கிடைக்கின்றன.
இந்த புதிய சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 சீரிஸ் கடந்த அக்டோபர் 3-ம் தேதி முதல் விற்பனைக்கு வந்துள்ளது.
கேலக்ஸி டேப் எஸ்10 சீரிஸின் சிறப்பம்சங்கள்: நாங்கள் முன்னதாக சொன்னது போல், சாம்சங் இந்த ஆண்டு முக்கிய அறிவிப்புகளுடன் இந்த ஆண்டு சந்தைக்குள் நுழைந்துள்ளது. டேப் எஸ்10+ ஆனது ஒரு பெரிய 12.4 இன்ச் OLED டிஸ்ப்ளே மற்றும் கூடுதலாக ஆண்டி-ரெப்லெக்ஷன் கோட்டிங் உடன் வந்துள்ளது.
டேப் எஸ்10 அல்ட்ரா ஸ்போர்ட்ஸானது இன்னும் பெரிய 14.6 இன்ச் OLED டிஸ்ப்ளேவுடன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் இரண்டு கேமராக்களுடன் வந்துள்ளது.
இதையும் படிக்க:
புதிய மொபைல் வாங்க பிளானா.. இந்த மாதம் விற்பனைக்கும் ஹைடெக் மாடல்கள்
டேப் எஸ்10 சீரிஸூக்கு, 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி இன்டெர்னல் ஸ்டோரேஜூடன் கூடிய மீடியாடெக் டைமன்சிட்டி 9300+ சிப்செட்டை சாம்சங் தேர்வு செய்துள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உடன் இத்தகைய புதிய டேப்லெட்டுகளை நீங்கள் பெறுகிறீர்கள். ஆனால் ஆண்ட்ராய்டு 15 அப்டேட் இல்லாமல், 4 ஓஎஸ் அப்டேட்கள் கொண்ட வாக்குறுதியுடன் இந்த டேப் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த ஆண்டு வெளியாகிய மற்ற சாம்சங் பிரீமியம் சாதனங்களைப் போலவே, கேலக்ஸி ஏஐ அம்சங்களின் தொகுப்பை இயல்பாகவே இதில் பெற முடியும். மேலும் இதில் இணைக்கப்பட்டுள்ள எஸ் பென் அவற்றை முழுமையாக ஆராய உங்களுக்கு உதவுகிறது. இந்த டேப்லெட்டுகள் எஸ்9 தொடரை விட வெறும் 15 கிராம் மட்டுமே எடை குறைந்ததாக இருக்கிறது மற்றும் நீடித்து உழைப்பதற்காக இதன் கவசம் அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளது.
கேலக்ஸி டேப் எஸ்10 பிளஸ் ஆனது 10,900mAh பேட்டரியுடனும், டேப் எஸ்10 அல்ட்ராவானது 11,200mAh பேட்டரியுடனும் வருகிறது. இரண்டும் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ஒய்ஃபை (6E மற்றும் 7) மற்றும் 5G நெட்வொர்க்கிற்கான ஆதரவுடன் வருகிறது.
.