ஏஎம்டி ரைசன் பிராசசரைக் கொண்ட லெனோவா திங்க்பேட் டி14எஸ் ஜென் 6 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது அடுத்த தலைமுறை ஏஐ திறன்களை உள்ளடக்கிய முதல் எக்ஸ்86 லெனோவா திங்க்பேட் என்பது குறிப்பிடத்தக்கது. ஏஎம்டி ரைசன் ஏஐ 7 ப்ரோ 360 ப்ராசசர் மூலம் இயக்கப்படும் இந்த லேப்டாப் 50 TOPS (Tera Operations per Second) ஏஐ-யின் செயலாக்க சக்தியை உறுதி செய்கிறது, இது ரியல்-டைம் மிஷின் லேர்னிங் மற்றும் அட்வான்ஸ்டு டேட்டா அனலைசிஸ் போன்ற பணிகளுக்கு ஏற்றது.
ஏஎம்டி ரைசன் ஏஐ 7 ப்ரோ 360 ப்ராசசர் உடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஏஎம்டி ரேடியான் 880எம் ஜிபியு, கிராபிக்ஸ் சம்பந்தப்பட்ட தீவிர பயன்பாடுகளுக்கு மற்றும் உயர்தர காட்சியமைப்புகளை வழங்குகிறது. நியூரல் ப்ராசசிங் யூனிட் (NPU) மற்றும் ஜிபியு (GPU) ஆகியவற்றின் கலவையானது தனிப்பயனாக்கப்பட்ட கணினி, அச்சுறுத்தல்களை கண்டறிதல் மற்றும் மென்மையான அனுபவத்தை வழங்குதல் உள்ளிட்ட அம்சங்களை ஏஐ மூலம் எளிதாக்குகிறது. விண்டோஸ் 11 இல் இயங்கும் இந்த லேப்டாப், ஏஐ-யின் சிறந்த மற்றும் மேம்பட்ட அனுபவத்தையும், பயனர்களின் பயன்பாட்டையும் எளிதாக்குகிறது.
திங்க்பேட் டி14எஸ் ஜெனரல் 6 ஆனது ஏஎம்டி-இன் மேம்பட்ட 4nm உடன் கட்டமைக்கப்பட்டுள்ளது, இதில் உயர் செயல்திறன் கொண்ட எட்டு ஜென் 5 கோர்கள் உள்ளன. இது, பின்புறம் உள்ள எக்ஸாஸ்ட் ஃபேன் மூலம் கூடுதல் குளிரூட்டும் திறனை வழங்குவதுடன், வல்லுநர்கள் ஒரே நேரத்தில் மல்டி டாஸ்குகளை அணுகுவதை எளிதாக்குகிறது. 17 மணிநேரம் நீடித்த பேட்டரி ஆயுளை கொண்ட இந்த லேப்டாப், பயண நேரத்தில் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேம்படுத்தப்பட்ட 3D பயன்பாடு, செயல்திறன் மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட காட்சிகளை வழங்குவதற்காக, இதில் ஏஎம்டி ஆர்டிஎன்ஏ 3.5 கட்டமைப்பையும் உள்ளடக்கியுள்ளது. இதன் 14-இன்ச் டபிள்யூயுஎக்ஸ்ஜிஏ (WUXGA) டிஸ்ப்ளே 88 சதவீத ஸ்கிரீன் டூ பாடி விகிதத்தை கொண்டுள்ளது, 400 நிட்ஸ் பிரைட்னஸ், டச் ஃபன்ங்ஷன் மற்றும் ஆற்றல் திறன் கொண்ட 3M ஆப்டிகல் தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு என்பது திங்க்பேட் டி14எஸ் ஜென் 6 இன் முக்கிய அம்சமாகும். லெனோவா திங்க்ஷீல்டு (ThinkShield) மற்றும் மைக்ரோசாஃப்ட் ப்ளூடான் சிப்-டூ-க்ளவுடு (Microsoft Pluton chip-to-Cloud) தொழில்நுட்பம் அச்சுறுத்தல்களுக்கு எதிராக மேம்பட்ட பாதுகாப்பை வழங்குகிறது. குறிப்பாக, அடையாள பாதுகாப்பு மற்றும் கிரிப்டோகிராஃபிக் சேவைகளை வழங்குகிறது. மேலும் இந்த லேப்டாப் பயனர்களின் நிலையான நடைமுறைகளுக்கு வசதியாக, நிறுவனத்தின் நவீன பாதுகாப்புஅம்சங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
Also Read :
எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்க இந்திய மக்கள் யோசிப்பது ஏன்?
இந்த லேப்டாப் கிட்டத்தட்ட 90 சதவீதம் வரையிலான நுகர்வோரரின் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைக் கொண் உருவாக்கப்பட்டுள்ளது, அதுமட்டுமின்றி பிளாஸ்டிக் இல்லாத, எஃப்எஸ்சி சான்றளிக்கப்பட்ட பேக்கேஜிங்கில் வருகிறது. நிறுவனங்களுக்கு உதவும் வகையில் லெனோவா, சிஓ2 (CO2) ஆஃப்செட் சர்வீசஸ் மற்றும் அசட் ரெக்கவரி சர்வீசஸ் போன்ற கூடுதல் சேவைகளையும் வழங்குகிறது.
விலையைப் பொறுத்த வரையில், லெனோவா திங்க்பேட் டி14எஸ் ஜென் 6 – ஏஎம்டி ரூ. 1,38,000 முதல் கிடைக்கிறது மற்றும் லெனோவாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதனை ஆர்டர் செய்ய முடியும் மற்றும் நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களிலும் இந்த லேப்டாப் விற்பனைக்கு கிடைக்கிறது.
.