Last Updated:

Epfo 3.0 | EPFO வாடிக்கையாளர்களுக்கான புதிய மொபைல் ஆப் மற்றும் டெபிட் கார்டு வசதி மே-ஜூன் 2025க்குள் தொடங்கப்படும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

News18

நாட்டின் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களுக்கு ஒரு நல்ல செய்தி. இனி உங்கள் PF கணக்கிலிருந்து பணம் எடுப்பது என்பது ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுப்பதுபோல எளிதாக இருக்கும். எனவே, நீங்கள் PF கணக்கிலிருந்து பணத்தை எடுக்க எந்த ஃபார்மையும் பூர்த்தி செய்ய வேண்டிய அவசியமில்லை. மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

அதாவது, EPFO வாடிக்கையாளர்களுக்கான புதிய மொபைல் ஆப் மற்றும் டெபிட் கார்டு வசதி மே-ஜூன் 2025க்குள் தொடங்கப்படும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்த வசதியானது EPFO ​​வாடிக்கையாளர்கள் வங்கிகள் மூலம் ஏடிஎம்-ல் இருந்து PF பணத்தை எடுக்க உதவும்.

EPFO 2.0ன் கீழ் முழு ஐடி தகவல் தொழில்நுட்ப அமைப்பு மேம்படுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஜனவரி மாத இறுதிக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பிறகு, EPFO ​​3.0 ஆப் மே-ஜூன் 2025க்குள் தொடங்கப்படும், இதன் மூலம் கிளைம் செட்டில்மென்ட் செயல்முறைகளை எளிதாக்கும்.

ரிசர்வ் வங்கி – நிதி அமைச்சகம் இடையே பேச்சுவார்த்தை

EPFO 3.0 மூலம் EPFO வாடிக்கையாளர்களுக்கு வங்கி வசதிகளை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகம் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தொழிலாளர் அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது நடைமுறைக்கு வந்தால், வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டுகளை அக்சஸ் செய்யலாம் மற்றும் ஏடிஎம்களில் இருந்து EPFO ​​பணத்தை எடுக்கலாம் என்றும் தொழிலாளர் அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: PPF, NSC, SSY, KVP, போஸ்ட் ஆபீஸ் டெபாசிட்டுகள்: வட்டி விகிதங்கள் என்ன?

பணம் எடுக்கும் வரம்பு

ஏடிஎம் கார்டைப் பெற்ற பிறகும், வாடிக்கையாளர்கள் தங்கள் முழு PF பணத்தை எடுக்க முடியாது. EPFO ​​உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் அனைத்துப் பணத்தையும் எடுக்க முடியாதபடி, பணம் எடுக்கும் வரம்பு EPFO அமைப்பால் நிர்ணயிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும் இந்த புதிய திட்டம் EPFO ​​வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் பயனளிக்கும். அதாவது இதன் மூலம் ஃபார்மை பூர்த்தி செய்து, EPFO ​​அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய சிரமம் தவிர்க்கப்படும்.

இதையும் படிக்க: அக்டோபர் 2024ல் இபிஎஃப்ஓ-வில் இணைந்த 13.41 லட்சம் உறுப்பினர்கள்…!

வேலைவாய்ப்புகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு

2014 முதல் 2024 வரை பிரதமர் மோடி ஆட்சிக் காலத்தில் 17.19 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்றும், இது UPA அரசை விட 6 மடங்கு அதிகம் என்றும் அமைச்சர் மாண்டவியா கூறியுள்ளார். 2023-24ல் மட்டும் சுமார் 4.6 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. விவசாயத் துறையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2004-2014க்கு இடையில் விவசாயத்தில் வேலைவாய்ப்பு 16% குறைந்தாலும், 2014-2023க்கு இடையில் 19% அதிகரித்துள்ளது.



Source link