ஏ.ஆர்.ரஹ்மான் தனது தந்தை போன்றவர் என்று கூறியுள்ள மோகினி டே, அவர்கள் இருவர் குறித்தான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு தங்களது 29 ஆண்டுகால திருமண உறவில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். அதற்கு அடுத்த சில மணிநேரத்தில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவில் பணியாற்றிய பெண் இசைக்கலைஞர் மோகனி டேவும் அவரது கணவரை விவாகரத்து செய்வதாக கூறினார்.

இதனை தொடர்ப்புப்படுத்தி, சமூகவலைதளங்களில் பல்வேறு அனுமானங்கள் பரவத் தொடங்கின. தனக்கு எதிரான தவறான செய்திகளை உடனடியாக நீக்குமாறு யூடியூபர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். இதனை தொடர்ந்து, உலகிலேயே சிறந்த மனிதர் ஏ.ஆர்.ரஹ்மான் என்றும், அவர் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என்றும் சாய்ரா பானு ஆடியோ வெளியிட்டார்.

விளம்பரம்

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து வீடியோ வெளியிட்டுள்ள இசை கலைஞர் மோகினி டே, தந்தை போன்ற நபருடன் தன்னை தொடர்புப்படுத்தி பேசுவது வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘எனக்கு பல ரோல் மாடல்கள் உள்ளனர். எனது வளர்ச்சியில் அவர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் எனக்கு தந்தையைப் போன்றவர்.  அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

விளம்பரம்

அவரது மகளுக்கு எனது வயதுதான் இருக்கும் என்று நினைக்கிறேன். என் மீதும் ஏ.ஆர்.ரகுமான் அன்பும் மரியாதையும் வைத்துள்ளார். அவரது இசைக்குழுவில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறேன். என்னையும் அவரையும் இணைத்து வதந்திகள் வந்துள்ளன. அவை உண்மை கிடையாது. இந்த வதந்திகள் காயப்படுத்துகின்றன. எனவே கனிவாக நடந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

விளம்பரம்

இதையும் படிங்க – actress samantha: “இதை நான் வேஸ்ட் பண்ணிட்டேன்..” நாகசைதன்யாவை மறைமுகமாக விமர்சித்த நடிகை சமந்தா!

ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்புவதை கண்டு மனம் உடைந்ததாக அவரது மகன், அமீன் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

.





Source link