சீரற்ற காலநிலை காரணமாக யாழ் ஏ-09 வீதியின் போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கொழும்பு – யாழ்ப்பாணம் ஏ 09 வீதியில் ஓமந்தை பகுதி நீரில் மூழ்கியுள்ள நிலையில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவ் வீதியினூடாக இலகு ரக வாகனங்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். அத்தோடு கனரக வாகனங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி மாற்று வழியாக வவுனியா ஊடாக யாழ்ப்பாணம் நோக்கியும், யாழ்ப்பாணம் ஊடாக வவுனியா நோக்கியும் பயணிக்கும் இலகு ரக வாகனங்கள் மன்னார் ஏ32 வீதியின் வவுனியா ,செட்டிகுளம் ,மன்னார் ஊடாக யாழ்ப்பாணம் வரை பயணிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
The post ஏ 09 வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டது appeared first on Thinakaran.