Last Updated:

தங்களது உணவு விருப்பங்கள் பற்றி தெளிவுடன் இருக்கும் மக்களுக்கு, ஆரோக்கியமான சிற்றுண்டி விருப்பங்களை வழங்குவதே அஹானாவின் குறிக்கோளாக இருந்தது.

News18

இந்தியாவில் பெண்கள் எப்படி தடைகளை உடைத்து பல்வேறு துறைகளில் வெற்றியை அடைகிறார்கள் என்பதற்கு அஹானா கௌதம் ஒரு சிறந்த உதாரணம். இவரது வாழ்க்கை கதை பலருக்கு உத்வேகம் அளிக்கக் கூடியது. ஒரு வலுவான மற்றும் உறுதியான தொழில்முனைவோரான இவர், ஓபன் சீக்ரெட் (Open Secret) என்ற ஆரோக்கியமான சிற்றுண்டி பிராண்டின் நிறுவனர் ஆவார். இது இந்திய உணவுத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.

அஹானாவின் கல்விப் பயணத்தை கேட்டால் பிரமிப்பாக இருக்கிறது. இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி பாம்பேயில் வேதியியல் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த அஹானா, அதன் பின்னர் 2014 முதல் 2016 வரை அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ படித்தார்.

உறுதியான கல்வி அடித்தளம் இருந்ததால், ப்ராக்டர் & கேம்பிள் மற்றும் ஜெனரல் மில்ஸ் போன்ற நன்கு பிரபலமான நிறுவனங்களில் அஹானா பணியாற்றினார். இதன் மூலம் கார்ப்பரேட் உலகில் மதிப்புமிக்க அனுபவத்தைப் பெற்றார். இருப்பினும், நல்ல வேலை, அதிக சம்பளம் என வாழ்க்கை எந்த பிரச்சனையும் இன்றி சந்தோஷமாக சென்று கொண்டிருந்த போதிலும், சொந்தமாக தொழில் தொடங்குவதில்தான் தனது உண்மையான ஆர்வம் இருப்பதை அஹானா உணர்ந்து கொண்டார். தனது தொழில்முனைவோர் பயணத்தை தொடர்வதற்காக, வசதியான வாழ்க்கையை விட்டு வெளியேற முடிவெடுத்தார்.

2019-ம் ஆண்டில், அஹானா ஒரு தைரியமான நடவடிக்கை எடுத்தார். தனது தாயின் நிதியுதவியுடன் ஓபன் சீக்ரெட் நிறுவனத்தை நிறுவினார். இந்த வணிகத்திற்கான யோசனை அஹானா அமெரிக்காவில் இருந்த காலத்தில் உருவானது. அங்கு அவர் பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் ஆரோக்கிய உணவுத் துறையில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.

ஹோல் ஃபுட்ஸ் (Whole Foods) என்ற முன்னணி சுகாதார உணவுக் கடையால் ஈர்க்கப்பட்ட அவர், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் செயற்கைப் பொருட்கள் சேர்க்கப்பட்ட பாரம்பரிய சிற்றுண்டிகளுக்கு மாற்றாக ஒன்றை நுகர்வோருக்கு வழங்கும் ஒரு பிராண்டை உருவாக்க முடிவு செய்தார். தங்களது உணவு விருப்பங்கள் பற்றி தெளிவுடன் இருக்கும் மக்களுக்கு, ஆரோக்கியமான சிற்றுண்டி விருப்பங்களை வழங்குவதே அஹானாவின் குறிக்கோளாக இருந்தது.

இதையும் படிக்க: 1, 3, 5 வருட FD திட்டங்களுக்கு SBI வழங்கும் வட்டி விகிதங்கள் எவ்வளவு…?

மக்களிடையே ஓபன் சீக்ரெட் விரைவில் பிரபலமடையத் தொடங்கியது. 2023ம் ஆண்டில் மட்டும் இந்த பிராண்ட் ரூ.120 கோடி வருவாயை ஈட்டியது. இந்த அற்புதமான சாதனை அஹானாவின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் தொழிலில் உள்ள சவால்களை வெற்றிகரமாக வழிநடத்தும் திறனை எடுத்துக்காட்டுகிறது. அவர் தனது வெற்றியின் பெரும்பகுதியை தனது தாயாரைத்தான் சேரும் எனக் கூறுகிறார். இன்று நான் இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்தடைவதற்கு, தனது தாயின் வழிகாட்டுதலும், கல்வி மற்றும் நிதி சுதந்தரத்திற்கு அவர் அளித்த முக்கியத்துவமே காரணம் என்று அடிக்கடி அஹானா குறிப்பிடுகிறார்.

இதையும் படிக்க: ஆதார் அட்டையை தொலைச்சிட்டீங்களா? பயப்பட வேண்டாம்… ஈஸியா வாங்குவதற்கு ஒரு வழி இருக்கு…!

அஹானா கௌதமின் தொழில் பயணம் விடாமுயற்சியின் ஆற்றலையும், கனவுகளை நிஜமாக மாற்றும் திறனையும் பிரதிபலிக்கிறது. இந்தியாவின் வளர்ந்து வரும் தொழில்முனைவோர் நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து, வணிக உலகில் பெண்கள் எவ்வாறு முன்னேற முடியும் என்பதற்கு இவரது கதை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

தமிழ் செய்திகள்/வணிகம்/

ஐஐடியில் படித்து, ஹார்வர்டில் எம்பிஏ முடித்த பெண்… இன்று ரூ.120 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனத்தின் நிறுவனர்…



Source link