இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகளின் அடுத்த 3 ஆண்டுகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.
இந்திய அணி தற்போது பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில், அடுத்த 3 சீசனுக்கான ஐபிஎல் அட்டவணையை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.
அதன்படி 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் 14ஆம் தேதி முதல் மே 25ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2026ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி ஐபிஎல் தொடங்கி மே 31ஆம் தேதி வரையும், 2027ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கி மே 30ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:
இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பை… எங்கே? எப்படி பார்க்கலாம்?
இந்த தேதிகள் குறித்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது என்றும், போட்டியின் அட்டவணைகளை கடைசி நேரத்தில் பிசிசிஐ அதிகாரிகள் வெளியிடுவதை தவிர்க்கவே அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலம் வரும் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
.