2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆப்பிளின் மிகப்பெரிய ஐபோன் வெளியீடு, ஒரு ஆச்சரியமான விஷயத்தைக் கொண்டிருக்கும். 4வது தலைமுறை ஐபோன் எஸ்இ ஆனது ஆப்பிளின் இன்-ஹவுஸ் 5G மோடம் மற்றும் ஏஐ-க்கான சப்போர்டுடன், மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் ஐபோன் மாடலாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இது 2022-ல் மக்களை வெகுவாக கவர்ந்த, ஐபோன் எஸ்இ பதிப்பின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாடலாக இருக்கும். சமீபத்திய மேம்படுத்தல்களின் படி, ஆப்பிள் அதன் புதிய மாடலுக்கான எஸ்இ பெயரை நீக்கி, அதை ஐபோன் 16 தொடரின் ஒரு பகுதியாக மாற்றலாம் என்று கூறப்படுகிறது.
ஆப்பிள், வரவிருக்கும் ஐபோன் எஸ்இ வரிசையை, ஐபோன் 16இ என்ற புதிய பெயருடன் அறிமுகப்படுத்தலாம். கூடுதலாக, இந்த புதிய மாடல் ஒரு பெரிய மறுவடிவமைப்புக்கு உட்படுத்தப்பட்டு, ஆப்பிளின் முதன்மை மாடல்களுடன் இதனை நெருக்கமாக இணைக்க வாய்ப்பு இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பிரீமியம் மிட்-ரேஞ்ச் விலையில், ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் மற்றும் பிற ஏஐ மூலம் இயங்கும் கருவிகள் உட்பட பிற அம்சங்களுடன் இதனை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்த விரிவான தகவலுக்கு, டிப்ஸ்டர் ஃபிக்ஸட் ஃபோகஸ் டிஜிட்டல் பகிர்ந்த பதிவில், சீன மைக்ரோ பிளாக்கிங் தளமான வெய்போவில், ஆப்பிள் அடுத்த ஐபோன் எஸ்இ – ஐ, ஐபோன் 16இ ஆக மறுபெயரிடலாம் என்று தெரிவித்துள்ளது. ஐபோன் 16இ ஆனது நிலையான ஐபோன் 16 – இன் அதே டிஸ்ப்ளே அளவைக் கொண்டிருக்கும் மற்றும் ஃபுல் ஸ்கிரீன் டிசைனில் கிடைக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் இதுவரை மூன்று எஸ்இ பிராண்டட் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 2016 இல் தனது முதல் ஐபோன் எஸ்இ இல் தொடங்கி, 2020 இல் அதன் 2 வது ஜெனரேஷன் மற்றும் 2022 இல் அதன் மூன்றாவது ஜெனரேஷனை வெளியிட்டது. இப்போது ஐபோன் 16இ, அதன் நான்காவது மாடலாக இருக்கும், தற்போதைய ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் உடன் இணைகிறது.
ஐபோன் எஸ்இ 4 டிசைன் மற்றும் அம்சங்கள்:
வரவிருக்கும் ஐபோன் எஸ்இ மாடல், ஐபோன் 14 போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று ஒரு வதந்தி பரவுகிறது, அதாவது இந்த மாடலில் பயனர்கள் ஒன்று அல்லது இரண்டு மேம்படுத்தல்களை எதிர்பார்க்கலாம். ஐபோன் எஸ்இ 4 ஆனது, ஐபோன் 14 போன்ற நவீன வடிவமைப்புடன், வைட் நாட்ச் மற்றும் ஃபேஸ் ஐடி சப்போர்ட்டுடன் வரும் என்று கூறுகிறார்கள். நிலையான 60Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன், 6.1-இன்ச் சூப்பர் எக்ஸ்டிஆர் (XDR) டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். மேலும் இது, இன்-ஹவுஸ் ஏ18 (A18) சிப்செட் மூலம் இயக்கப்படலாம் மற்றும் நிலையான ஐபோன் 16 வகைகளைப் போன்ற ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் சப்போர்டையும் கொண்டிருக்கலாம்.
இதுகுறித்து கசிந்த பெரும்பாலான தகவல்கள், இந்த மாடலில் ஒரு மேம்படுத்தப்பட்ட கேமரா யூனிட் இருக்கலாம் என்று தெரிவிக்கின்றன. ஆனால் அதில், 48 மெகாபிக்சல் சோனி எக்ஸ்மார் ஐஎம்எக்ஸ்904 (48 MP Sony Exmor IMX904) சென்சார் மற்றும் 12 மெகாபிக்சல் முன் கேமரா சென்சார் என மேம்படுத்துவது, நிச்சயமாக தற்போதுள்ள 8 மெகாபிக்சல் சென்சாரில் இருந்து குறிப்பிடத்தக்க மேம்பாடாக இருக்கும். மேலும், இந்த மாடலில் 3,279 mAh பேட்டரி இருக்கும், இது 20W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் க்யூஐ2 (Qi2) மற்றும் மேக்சேஃப் (MagSafe) வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது. இதில், டஸ்ட் அண்ட் வாட்டர் ரெசிஸ்டன்ஸ்-க்கான IP68 ரேட்டிங்கும் அடங்கும்.
ஐபோன் எஸ்இ 4/ஐபோன் 16இ மாடல் $499 (தோராயமாக ரூ. 42,220) மற்றும் $549 (சுமார் ரூ. 46,400) விலையில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது, இது புதிய ஏஐ அம்சங்களை வழங்கும் மிகவும் மலிவு விலை ஐபோன் மாடலாக இருக்கும் என்கிறார்கள்.
December 26, 2024 5:56 PM IST