இந்த விற்பனையில் ஐபோன் 16 சீரிஸில் குறிப்பிடத்தக்க தள்ளுபடிகள் கிடைக்கும் என்று ஃபிளிப்கார்ட் உறுதியளிக்கிறது. ஐபோன் 16 (128GB)-ன் விலை ரூ.79,999 ஆக இருக்கும் நிலையில் தற்போது ரூ.67,999-க்கு கிடைக்கிறது. இதன் மூலம் ரூ.12,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. தவிர வாடிக்கையாளர்கள் HDFC வங்கியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி இந்த மொபைலை வாங்கினால் ரூ.3,000 வரை கூடுதல் தள்ளுபடியையும் பெறலாம்.

எனினும் பண்டிகை விற்பனையின் போது விலைகளை அவ்வப்போது மாற்றி கொண்டே இருக்கும் ஃபிளிப்கார்ட்டின் செயல்பாட்டை கருத்தில் கொண்டால், சிறப்பு விற்பனை முழுவதும் சலுகைகள் சீராக இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ்: ஐபோன் 16 ப்ரோவின் விலை தற்போது ரூ.1,12,900-ஆக உள்ளது, இது அதன் அசல் அறிமுக விலையான ரூ.1,19,900-லிருந்து ரூ.7,000 தள்ளுபடியை கொண்டுள்ளது. எனினும் இந்த சலுகைக்கு விலை ஐபோன் 16 ப்ரோவின் ஒயிட் கலர் வேரியன்ட்டிற்கு மட்டுமே பொருந்தும். கூடுதலாக, வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளை பயன்படுத்துவதால் கூடுதலாக ரூ.5,000 தள்ளுபடி பெறலாம், இது விலையை மேலும் குறைக்கிறது. இந்த சீரிஸில் இருக்கும் காஸ்டலி மாடலான iPhone 16 Pro Max, இப்போது ரூ.1,37,900-க்கு விற்கப்படுகிறது, இது அதன் அசல் விலையான ரூ.1,44,900-லிருந்து விலை குறைக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 17-க்காக நீங்கள் காத்திருக்க வேண்டுமா?: ஐபோன் 16 வாங்க இது சரியான நேரம் என்றாலும், ஆப்பிள் இந்த ஆண்டு செப்டம்பரில் ஐபோன் 17 சீரிஸை வெளியிடும்.இது ஐபோன் 16 சீரிஸை விட பல அப்கிரேட்ஸ்களை கொண்டு சிறந்த செயல்திறன் மற்றும் யூஸர் எக்ஸ்பீரியன்ஸை கொண்டிருக்கும். மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்று புதிய A17 பயோனிக் சிப் ஆகும், இது A16 சிப்பை விட சிறந்த செயல்திறனை வழங்குகிறது.

அதே போல ஐபோன் 17 மெலிதான பெசல்கள் மற்றும் மிகவும் ஈர்க்க கூடிய வடிவமைப்பை கொண்டிருக்கலாம், மேம்படுத்தப்பட்ட ப்ரோ-மோஷன் டிஸ்ப்ளேவுடன் சேர்ந்து, மேம்பட்ட பார்வை அனுபவத்திற்கு சிறந்த பிரகாசத்தை வழங்கும். மேலும் மேம்படுத்தப்பட்ட சென்சார்கள், சிறந்த லோ-லைட் செயல்திறன் மற்றும் கேமரா அம்சங்களுடன் கூடிய அப்கிரேட்ஸ்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும், ஐபோன் 17, டிஸ்ப்ளே இல்லாத ஃபேஸ் ஐடி அல்லது மேம்படுத்தப்பட்ட ஆக்மென்டட் ரியாலிட்டி திறன்கள் போன்ற புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தலாம்.

ஆப்பிள் இன்டலிஜென்ஸ் அப்டேட்ஸ்களுடன் முழு ஒருங்கிணைப்பு, மேம்படுத்தப்பட்ட கேமரா அமைப்பு, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட தோற்றம் மற்றும் முற்றிலும் புதிய மாடல் ஆகியவற்றை வரவிருக்கும் ஐபோன் 17 சீரிஸ் கொண்டிருக்கும். எனினும் தங்கள் டிவைஸை உடனடி அப்கிரேட் செய்ய நினைப்பவர்களுக்கு, ஐபோன் 16 சீரிஸ் ஏற்கனவே iOS 18 உடன் ஒரு அதிநவீன அனுபவத்தையும் வரவிருக்கும் ஆப்பிள் நுண்ணறிவு அம்சத்திற்கான அணுகலையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.



Source link