2025 ஆம் ஆண்டில் ஐபோன் 17 ஸ்லிம் அல்லது ஏர் மூலம் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டுவர ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. ஐபோன் 17 அறிவிக்கப்பட்டதிலிருந்து, அதைப் பற்றி வெளிவரும் ஒவ்வொரு புதிய தகவலையும் பகிர்ந்து கொள்ள டிப்ஸ்டர்கள் மெனக்கிட்டு வருவதால், இந்த புதிய மாடல் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளது. இப்போது, இதுகுறித்த மற்றொரு ​​​புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது, வரவிருக்கும் ஐபோன் 17 புதிய மாடல், ஐபோன் 16 ப்ரோ மாடலை விட இரண்டு மில்லிமீட்டர் மெல்லியதாக இருக்கும் என்று ப்ளூம்பெர்க்கைச் சேர்ந்த மார்க் குர்மன் கூறியிருக்கிறார்.

அவரது வாராந்திர பவர் ஆன் செய்திமடலில், வரவிருக்கும் ஐபோன் 17 ஏர் மாடல் தற்போதைய மாடலை விட 2 மிமீ மெலிதாக இருக்கும் என்று குர்மன் தெரிவித்துள்ளார். குறிப்புக்கு, ஐபோன் 16 ப்ரோ 8.25 மிமீ தடிமன் கொண்டது, எனவே அல்ட்ரா-ஸ்லிம் ஐபோன் 17 6.25 மிமீ தடிமனாக இருக்கலாம். இந்த வதந்திகள் உண்மையாகும் பட்ச்தில், ஐபோன் 17 ஏர் ஆனது 6.9 மிமீ தடிமன் கொண்ட ஐபோன் 6 இன் சாதனையை முறியடித்து, இதுவரை இல்லாத மெலிதான ஐபோனாக அறிமுகமாகலாம்.

தொழில்நுட்ப நிறுவனமான ஐபோன் 17 ஏருக்கு நிபுணத்துவம் வாய்ந்த புதிய சிப்பை வடிவமைக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. செயல்திறனைப் பொறுத்த வரையில், இது மிகவும் மேம்பட்டதாக இருக்கும் மற்றும் இதன் உள்ளே குறைந்த இடத்தை எடுத்துக் கொள்ளும். இந்த கூடுதல் இடம், ஆப்பிள் ஐபோன் 17 ஏரை மெல்லியதாக மாற்றவும், பேட்டரி, கேமரா அல்லது டிஸ்ப்ளே போன்ற எந்த சமரசமும் இல்லாமல் பிற முக்கியமான கூறுகளை பொருத்தவும் அனுமதிக்கலாம்.

இதுதவிர, மேம்படுத்தப்பட்ட இணைப்புக்காக வரவிருக்கும் ஐபோன் 17 மாடலில் தனிப்பயனாக்கப்பட்ட 5G மோடம் சிப்பை ஒருங்கிணைக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய 5G சிப்கள், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது குவாள்காம் வழங்கும் 5G சிப்களை விட சிறியதாகவும், திறமையானதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆப்பிள் தனது மோடம் சிப் தொழில்நுட்பத்தை தொடர்ந்து பரிசோதனை செய்து வருவதால், கிடைக்கக்கூடிய கூடுதல் இடம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் போன்ற புதுமைகளுக்கும் வழி வகுக்கலாம் என்று கூறுகிறார்கள். இப்போதைக்கு, மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சந்தையில் போட்டியாக, ஒரு மாடலைக் கொண்டு வர மடிக்கக்கூடிய ஐபோன் தொழில்நுட்பத்தை ஆராய்வதில் நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: வாட்ஸ்அப் யூசர்கள் இனி தங்களுக்கு விருப்பப்பட்ட மொழியில் சாட்டை டிரான்ஸ்லேட் செய்து கொள்ள முடியும்!

ஐபோன் 17 ஏரின் மெலிதான தன்மையைத் தவிர, ஆப்பிள் நிறுவனம் 120 ஹெர்ட்ஸ் ப்ரோமோஷன் டிஸ்ப்ளே மற்றும் பின்புறத்தில் ஒரு 48 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது நம்மை ஐபோன் 8 தொடரின் நாட்களுக்கு அழைத்துச் செல்லும். மேலும், ஆப்பிள் நுண்ணறிவு அம்சங்களை இயக்க அல்ட்ரா-ஸ்லிம் ஐபோன், 8 ஜிபி ரேம் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.



Source link