ஒன் பிளஸ் நிறுவனமானது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பல விலை பிரிவுகளில் ஸ்மார்ட் ஃபோன்களை விற்பனை செய்து வருகிறது. அந்தவகையில், நிறுவனத்தின் OnePlus Nord CE Lite சீரிஸ் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட் ஃபோன்களாக இருக்கின்றன.
இந்த ஆண்டு ஒன் பிளஸ் நிறுவனம் அதன் 4-வது தலைமுறை OnePlus Nord CE 4 Lite 5G ஸ்மார்ட் ஃபோனை அறிமுகப்படுத்தியது. ரூ.19,000 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மொபைல் Qualcomm Snapdragon 695 ப்ராசஸரை கொண்டுள்ளது. இந்த மொபைல் 6.6 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 80W SUPERVOOC சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் 5,500mAh பேட்டரி உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது.
மிகவும் மலிவு விலையில் மற்றும் சிறந்த OnePlus மொபைல்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் நிலையில், தற்போது இந்த மொபைல் இன்னும் குறைவான விலையில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் இந்தியா வெப்சைட் மற்றும் அமேசான் இந்தியா ஆகியவற்றில், OnePlus Nord CE 4 Lite 5G மொபைலானது தற்போது ரூ.16,999 என்ற விலையில் கிடைக்கிறது. இதோடு இலவசமாக OnePlus Bullets Wireless Z2 இயர்பட்ஸ் வழங்கப்டுகிறது.
Nord CE 4 Lite 5G-க்கு அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ஆஃபர்:
அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ஆஃபரில் ஒன் பிளஸ் நிறுவனத்தின் Nord CE 4 Lite 5G ரூ.16,999-க்கு கிடைக்கிறது. இந்த மொபைலின் 8GB ரேம்+ 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் விலை ரூ.19,999 ஆகும். தற்போது இந்த மொபைலை வாங்குவோர் ரூ.2,000 இன்ஸ்டன்ட் பேங்க் ஆஃபர் மற்றும் ரூ.1,000 ஸ்பெஷல் கூப்பன் மூலம் குறைவான விலையில் வாங்கி பயன் பெறலாம்.
Amazon-ல் இந்த டீலை பெற
அமேசான் இந்தியா வெப்சைட் சென்று OnePlus Nord CE 4 Lite 5G மொபைலை தேடுங்கள். உங்கள் கார்ட்-ல் இந்த ஃபோனைச் ஆடர் செய்யலாம் அல்லது ‘Buy Now’ ஆப்ஷனை கிளிக் செய்யவும். செக் அவுட்டின் போது, ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.1,000 கூப்பன் தானாகவே பயன்படுத்தப்படும், பின்னர் இதன் விலை ரூ.16,999-ஆக குறையும். கூடுதலாக, சிறப்பு விற்பனை சலுகையின் ஒரு பகுதியாக, கூடுதல் கட்டணமின்றி இலவசமாக OnePlus Bullets Wireless Z2 இயர்பட்ஸ்களையும் நீங்கள் பெறலாம்.
இந்த மொபைலுக்கு ஒன்பிளஸ் இந்தியா வெப்சைட்டில் வழங்கப்படும் சலுகை:
ஒன்பிளஸ் இந்தியா வெப்சைட் மூலம் Nord CE 4 Lite 5G மொபைலை வாங்க, தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.2,000 வரை இன்ஸ்டன்ட் பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கும். அமேசான் ஆஃபரைப் பொருத்து விலையை ரூ.16,999 ஆகக் குறைத்து, சிறப்பு ரூ.1,000 கூப்பனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கூடுதலாக ரூ.1,000 சிறப்பு கூப்பனைப் பயன்படுத்தி, விலையை ரூ.16,999-ஆக குறைத்து கொள்ளலாம். ஒன்பிளஸ் நிறுவனம் Nord CE4 Lite 5G மொபைலை வாங்கும் போது OnePlus Bullets Wireless Z2 இயர்பட்ஸை இலவசமாக வழங்குகிறது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் 3 மாதங்கள் வரை கட்டணமில்லா EMI ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.
Nord CE 4 Lite 5G மொபைலின் ஸ்பெசிஃபிகேஷன்கள்:
இந்த மொபைல் 1,080 x 2,400 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் கூடிய 6.67-இன்ச் ஃபுல் -HD+ AMOLED டிஸ்ப்ளே மற்றும் 2,100nits பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. சிறந்த செயல்திறனுக்காக குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இது 8GB LPDDR4X ரேம் மற்றும் 256GB வரை UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. Nord CE 4 Lite மொபைலில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் உள்ளது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷனுடன் கூடிய 50MP பிரைமரி சென்சார் மற்றும் 2MP டெப்த் சென்சார் வசதி உள்ளது.
செல்ஃபிகளுக்காக எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் சப்போர்ட் கொண்ட 16MP ஃப்ரன்ட் கேமரா உள்ளது. இதில் 80W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் 5,500mAh பேட்டரி உள்ளது. இந்த ஃபோன் 5W ரிவர்ஸ் சார்ஜிங்கையும் சப்போர்ட் செய்கிறது.
.