பாகிஸ்தானில் ஒன்றரை இலட்சம் அரச பணியாளர்களை நீக்க முடிவு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கான ஒரு முயற்சியாக சர்வதேச நாணய நிதியத்திடம் பெரும் தொகையை கடனாக பெற பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்தது.

அதே சமயம் கடனை வழங்க பாகிஸ்தான் அரசுக்கு பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தது. அதில் முதன்மையானது பாகிஸ்தான் அரசு தனது செலவுகளை குறைக்க வேண்டும் என்பதாகும். எனவே செலவுகளை குறைக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த பாகிஸ்தான் நிதி அமைச்சர் “அரசு துறைகளின் எண்ணிக்கையை பாதியாக குறைத்து, 1½ லட்சம் வேலைகளை ஒழிக்க அரசு முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.



Source link