கான்பூரில் நடைபெற்று வரும் வங்கதேசத்திற்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி ஒருநாள் போட்டியைப் போல அதிரடியாக ரன்கள் குவித்துள்ளது. நாளை கடைசி நாள் ஆட்டம் மீதம் உள்ள நிலையில் இந்திய அணி வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

மழை குறுக்கீடு காரணமாக 2 மற்றும் 3 ஆம் நாள் ஆட்டங்கள் நடைபெறாத நிலையில், இன்று 4 ஆம் நாள் ஆட்டம் கான்பூரில் நடைபெற்றது. வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டிற்கு 107 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இருந்து ஆட்டத்தை தொடர்ந்தது.

விளம்பரம்

அந்த அணியின் மோமினுல் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 194 பந்துகளை எதிர்கொண்ட அவர் 17 பவுண்டரி 1 சிக்சருடன் 107 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார்.

மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 74.2 ஓவர்களில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் தொடக்கம் முதலே பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்கள் சேர்த்தனர்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 72 ரன்களும், கேப்டன் ரோஹித் 23 ரன்களும் எடுத்து வெளியேற அடுத்து வந்த கில் 39 ரன்கள் எடுத்தார். கோலி, கே.எல். ராகுல் ஆகியோர் அதிரடியாக முறையே 47 மற்றும் 68 ரன்கள் குவித்தனர். பெரும்பாலான இந்திய வீரர்களின் ஸ்ட்ரைக் ரேட் 100-யை விட அதிகமாக இருந்தது.

விளம்பரம்

34.4 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து இந்திய அணி 285 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்தார். ஒருநாள் போட்டியைப் போன்று இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்சை விளையாடினர்.

இதையும் படிங்க – உலகின் டாப் 4 வேகப் பந்துவீச்சாளர்கள்… ஜாகீர் கான் யாரை தேர்வு செய்தார் தெரியுமா?

இதையடுத்து 52 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி, இன்றைய 4 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்துள்ளது.

விளம்பரம்

நாளை மழை பெய்யாமல் இருந்தால் அதிகபட்சமாக 80 முதல் 85 ஓவர்கள் வரை வீசப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் இந்திய அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

.



Source link