இறக்குமதி செய்யப்பட்ட 101,000 மெற்றிக் டன் அரிசி இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் அறிவித்துள்ளது.
அவற்றில், 40,000 மெற்றிக் டன் பச்சை அரிசியும், 61,000 மெற்றிக் டன் நாட்டு அரிசியும் உள்ளடங்குவதாகச் சுங்க திணைக்கள ஊடக பேச்சாளரும், சுங்க திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருக்கொட தெரிவித்தார்.
இதேவேளை அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் 10ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.