Last Updated:

Vinod Kambli: வினோத் காம்ப்ளி பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின. எனினும் எந்த அளவுக்கு அவரின் நிலைமை உள்ளது என்பது வெளிப்படவில்லை. தற்போது அது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

News18

உடல் நலக்குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். எனினும், அவர் நிதி ரீதியாக சிக்கலை சந்தித்து வரும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பர். 51 வயதாகும் அவருக்கு கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து தானே மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து மருத்துவமனையில் காம்ப்ளி நடனமாடிய காட்சிகள் சமீபத்தில் வைரலாகின. இந்நிலையில், வினோத் காம்ப்ளி நிதி ரீதியாக சிக்கலை சந்தித்து வரும் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: மருத்துவமனையிலிருந்து வினோத் காம்ப்ளி டிஸ்சார்ஜ்… மது அருந்துவதை தவிர்க்குமாறு அட்வைஸ்…

வினோத் காம்ப்ளி பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின. எனினும் எந்த அளவுக்கு அவரின் நிலைமை உள்ளது என்பது வெளிப்படவில்லை. தற்போது அது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, கடந்த 6 மாதமாக வினோத் காம்ப்ளி மொபைல் போன் இல்லாமல் இருந்து வருகிறாராம். இதற்கு முன் ஐபோன் பயன்படுத்திய நிலையில், தனது வீட்டில் பிரச்சினை ஏற்பட்டு அதனை சரிசெய்ய ரூ.15,000 கட்டத் தவறியதால், அதற்கு பதிலாக வினோத் காம்ப்ளியின் ஐபோனை வீட்டை பழுதுபார்த்தவர்  எடுத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது.

ஒரு காலத்தில் 13 கோடி ரூபாய் சொத்து வைத்திருந்த வினோத் காம்ப்ளி, இப்போது அதனையும் தொலைத்துவிட்டு பிசிசிஐ வழங்கிவரும் ஓய்வூதியத்தையே தனது குடும்பச் செலவுகளுக்கு நம்பியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. பிசிசிஐ அவருக்கு மாத ஓய்வூதியமாக ரூ.30,000 வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “ஆடம்பரமாக செலவு செய்யாதீர்கள்” – வினோத் காம்ப்ளியின் பரிதாப நிலை… உணர்ச்சிவசப்பட்ட பி.வி.சிந்து!

அவரின் வீடும் கடனில் உள்ளது. சமீபத்தில் காம்ப்ளியின் மனைவி அளித்த பேட்டியில், ரூ.18 லட்சம் வீட்டுக் கடனுக்காக வங்கி தங்களை தொந்தரவு செய்வதாக கூறியிருந்தார். எனினும் ஒரு அரசியல்வாதி சமீபத்தில் இவர்களுக்கு ரூ.5 லட்சம் கொடுத்தாலும், அது வீட்டுக் கடனை அடைக்க போதுமானதாக இல்லை என்று வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும் வினோத் காம்ப்ளியிடம் சிகிச்சைக்கான பணம் இல்லை. ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு இலவச சிகிச்சை அளித்து தற்போது குணமாக்கி டிஸ்சார்ஜ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: காய்ச்சலுக்காக மருத்துவமனை சென்ற வினோத் காம்ப்ளி.. பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி!



Source link