750 முதல் 900 வரையிலான ஸ்கோர் நல்ல கிரெடிட் ஸ்கோராக கருதப்படுகிறது. நல்ல கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு குறைவான வட்டி விகிதங்களில் விரைவாக லோன்கள் அங்கீகரிக்கப்படுகின்றன. எனினும், உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் குறைந்தால், அது உங்களுடைய பொருளாதாரத்தை நீண்ட காலத்திற்கு பாதிக்கலாம். ஆகவே, பேமெண்ட் செலுத்த தவறுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
7 நாள் தாமதமாக பேமெண்ட் செலுத்துதல்
7 நாட்கள் தாமதமாக பேமெண்ட் செலுத்துவது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பெரிய அளவில் பாதிக்காது. ஆனால், இந்த தாமதம் நிச்சயமாக உங்களுடைய கிரெடிட் பியூரியா ரெக்கார்டுகளில் பதிவு செய்யப்படும்.
30 நாட்களுக்கும் குறைவான நாட்கள் தாமதமாக பேமெண்ட் செலுத்துதல்
30 நாட்களுக்கும் குறைவான நாட்கள் தாமதமாக நீங்கள் பேமெண்ட் செலுத்துவது உங்களுடைய கிரெடிட் வரலாற்றில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். சில சமயங்களில் 15 நாட்கள் நீங்கள் தாமதமாக பேமெண்ட் செலுத்தினால் கூட, அது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை 50 முதல் 100 புள்ளிகள் வரை குறைக்கலாம்.
30 நாட்கள் தாமதம்
பேமெண்டை நீங்கள் 30 நாட்கள் தாமதமாக செலுத்தும்போது, அது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரில் 90 முதல் 110 புள்ளிகள் வரை குறைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
60 நாட்கள் தாமதம்
ஒருவேளை உங்களுடைய பேமெண்ட் 60 நாட்களுக்கு மேலாக நிலுவையில் இருக்கும் பட்சத்தில் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரில் 130 முதல் 150 புள்ளிகள் வரை குறைக்கப்படும்.
90 நாட்கள் தாமதம்
90 நாட்களுக்கு மேல் நீங்கள் செலுத்தாமல் இருந்தால், அது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரில் நீண்ட நாள் தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது எதிர்காலத்தில் உங்களுக்கு லோன்கள் வாங்குவது மிகவும் சிக்கலானதாக அமைந்துவிடும்.
120 நாட்கள் தாமதம்
120 நாட்களுக்கு மேல் பேமெண்ட்களை செலுத்தாமல் போனால், அது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை நிரந்தரமாக பாதிக்கலாம். இதனால், எதிர்காலத்தில் லோன்கள் வாங்குவது கடினமான காரியமாக மாறும்.
இதையும் படிக்க: Bank Account : ஜனவரி 1 முதல் இந்த வங்கிக் கணக்குகள் ரத்து செய்யப்படும்.. ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு..!
பேமெண்ட்களை தாமதமாக செலுத்துவதை தவிர்ப்பது எப்படி?
ஆட்டோமேட்டிக் பேமெண்ட்டுகள்
ஒருவேளை உங்களுக்கு மறதி இருந்தால், ஆட்டோமேட்டிக் பேமெண்ட்களை எனேபிள் செய்து, சரியான நேரத்திற்கு உங்களுடைய பேமெண்ட்டுகள் செலுத்தப்படுவதை நீங்கள் உறுதிப்படுத்தலாம்.
அலாரம் மற்றும் ரிமைண்டர்கள்
டியூ தேதிகளை உங்களுக்கு ஞாபகப்படுத்துவதற்கு அலாரம் அல்லது ரிமைண்டர் அப்ளிகேஷன்களை நீங்கள் பயன்படுத்தலாம்.
எமர்ஜென்சி ஃபண்ட்
எதிர்பாராத செலவுகளை சமாளிப்பதற்கு எமர்ஜென்சி ஃபண்ட் உருவாக்குவது மிகவும் அவசியம். இதனால் திடீரென்று உங்களுக்கு அவசர தேவை ஏற்படும்போது கடன் வாங்குவதை நீங்கள் தவிர்க்கலாம்.
கடன் வழங்குனர்களிடம் பேசுங்கள்
ஒருவேளை பேமெண்டை சரியான நேரத்திற்கு செலுத்த முடிவதில் உங்களுக்கு சிக்கல் இருந்தால், முன்கூட்டியே கடன் வழங்குனரிடம் சென்று அதனை தெரிவிப்பது புத்திசாலித்தனம். ஒரு சில கடன் வழங்குனர்கள் தற்காலிக அட்ஜஸ்ட்மென்ட்களை ஏற்றுக் கொண்டு உங்களுக்கு உதவுவதற்கு வாய்ப்பு உள்ளது.
உங்களுடைய வருமானம் மற்றும் செலவுகளை தெளிவாக புரிந்து கொண்டு, பில்களுக்கு முன்னுரிமை கொடுத்து, வீண் செலவுகளை தவிர்ப்பது கூடுதல் குறிப்புகளாக அமைகிறது.
December 31, 2024 8:03 AM IST