ஒரு ரூபாய் நோட்டு இருந்தால், ரூ.7 லட்சம் வரை பெறலாம். அது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை சேகரிக்கும் பழக்கம் இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு தான். சமீப காலமாக பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் ஏலம் மூலம் பழைய பணத்தை லட்ச ரூபாய்க்கு விற்கலாம். குறிப்பாக பழங்கால சிற்பங்கள், பழைய காசுகள், பழைய நோட்டுகளுக்கான தேவை அதிகமாக உள்ளது. எனவே இவற்றை வாங்குவதற்கும், விற்பதற்கும் சில தளங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி இங்கு பழைய நோட்டுகள் அதிக ஏலத்திற்கு விடப்படுகிறது.
பழைய ரூ.1, ரூ.2 நோட்டுகள், ஒரு பைசா நாணயம், 5 பைசா நாணயம், 25 பைசா நாணயம் போன்ற நாணயங்கள் விற்பனை செய்வதன் மூலம், உங்கள் கணக்கிற்கு லட்சக்கணக்கில் பணம் வந்து சேரும். காயின் பஜார் போன்ற தளங்களில் இவற்றை வாங்கவும், விற்கவும் முடியும். காயின் பஜாரில் பழைய ரூபாய் நோட்டு ரூ.7 லட்சத்திற்கு விற்கப்பட்டது. இப்போதைய தலைமுறையினர் அனைவரும் ஒரு ரூபாய் நோட்டைப் பார்த்திருக்கலாம். ஆனால் காயின் பஜாரில் ஏலம் விடப்படும் ஒற்றை ரூபாய் நோட்டு சாதாரணமானது அல்ல. இது ஆங்கிலேயர் காலத்தில் அச்சிடப்பட்ட நோட்டு ஆகும்.
Also Read:
BSNL-ன் அசர வைக்கும் அதிரடி சேவை! 500-க்கும் மேற்பட்ட நேரடி சேனல்களை பார்க்கலாம்.. முழு விவரம் இதோ!
29 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசு ரூ.1 நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்திவிட்டது. 2015ல் மோடி அரசு பதவிக்கு வந்த பிறகு, இந்த ரூ.1 நோட்டுகள் மறுபதிப்பு செய்யப்பட்டன. இந்த ரூ.1 நோட்டு மூலம் ரூ.7 லட்சம் வரை சம்பாதிக்கலாம். ஆனால் இந்த நோட்டு, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த நோட்டின் முதல் பதிப்பை விற்றால் நிச்சயம் பெரிய தொகையை பெற முடியும். இந்த தனித்துவமான ரூ.1 நோட்டு சுதந்திரத்திற்கு முந்தைய ஒரே நோட்டு என்பதால் தனித்துவமானது. இது ஆன்லைன் ஏலத்தில் விற்கப்படும் அரிய மற்றும் மதிப்புமிக்க நோட்டு ஆகும். கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் பழமையான இந்த நோட்டு பிரிட்டிஷ் இந்தியாவால் 1935ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
சுதந்திரத்திற்கு முன் வெளியிடப்பட்ட ரூ.1 நோட்டு, தற்போது வெகு சிலரிடம் மட்டுமே உள்ளது. இந்த ஒற்றை நோட்டு காயின் பஜாரில் ரூ.7 லட்சத்தை ஈட்டியுள்ளது. இது தவிர, பல்வேறு நாணயங்கள் மற்றும் நோட்டுகளுக்கு எப்போதுமே நல்ல கிராக்கி உள்ளது. இந்த பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகள் புழக்கத்திற்கு பயனற்றவை. எனவே நிதிச் சந்தையில் அவற்றிற்கு மதிப்பு இல்லை. ஆனால் நாணய சேகரிப்பு சந்தையில் அவற்றிற்கு நல்ல தேவை உள்ளது. இவற்றை காயின் பஜார், கலெக்டர் பஜார் போன்ற தளங்களில் வாங்கி, விற்கலாம். மேலும், இவை பிளிப்கார்ட் போன்ற தளங்களிலும் கிடைக்கின்றன.
இந்த நோட்டை ஆன்லைனில் விற்க விரும்பினால், காயின் பஜார் அல்லது குயிக்கர் போன்ற இணையதளங்களில் விற்கலாம். இருப்பினும், இந்த பழைய நோட்டுகள் அல்லது நாணயங்களை வாங்கவோ, விற்கவோ இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிகாரப்பூர்வமாக அனுமதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
.