Last Updated:
டிசம்பர் 14ஆம் தேதி இதற்கான வாக்குப்பதிவு தோல்வியில் முடிந்தாலும், 27ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் அவருக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
ராணுவ சட்டத்தின் மூலம் ராணுவ ஆட்சியை அமல்படுத்திய தென்கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலை அந்நாட்டு ஊழல் தடுப்புப் பிரிவு புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர்.
தென்கொரியாவின் அதிபராக இருந்த யூன் சுக் இயோல், கடந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி, நாட்டுமக்களிடம் உரையாற்றியபோது, அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானத்தைக் கொண்டு வந்தன.
டிசம்பர் 14ஆம் தேதி இதற்கான வாக்குப்பதிவு தோல்வியில் முடிந்தாலும், 27ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் அவருக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, யூன் சுக் இயோல் மீது வழக்கும் தொடரப்பட்டது.
இந்த வழக்கு சியோல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கடந்த வாரம் யூன் சுக் இயோலை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இயோலை கைதுசெய்ய அதிகாரிகள் முயன்ற போது, அவரது ஆதரவாளர்களின் போராட்டத்தால் கைது செய்ய முடியவில்லை. இந்த சூழலில் நேற்றிரவு அதிபர் மாளிகை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட ஊழல் தடுப்பு அதிகாரிகள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் இயோலை இரண்டாவது முயற்சியில் கைது செய்தனர்.
January 15, 2025 12:21 PM IST