Last Updated:
Vijay | கிட்டத்தட்ட விஜய் நடித்த 4 திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகியுள்ளன. இந்த ஆச்சரியமளிக்கும் டேட்டா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கிட்டத்தட்ட விஜய் நடித்த 4 திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகியுள்ளன. இந்த ஆச்சரியமளிக்கும் டேட்டா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
முழு நேர அரசியலில் குதிக்க இருக்கும் விஜய் தனது இறுதிப்படம் எனக் கூறி ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
படம் அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. பெரும்பாலும் பண்டிகை நாட்களில் ரஜினி, விஜய், அஜித், போன்ற உச்சநட்சத்திரங்களின் படங்களை ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் இந்த பொங்கலுக்கு அந்த நடிகர்களின் படங்கள் எதுவும் திரைக்கு வரவில்லை.
இதையும் வாசிக்க: Mysskin | ரூ.5 கோடி கேட்ட மிஷ்கின்…ஓடிய இயக்குநர்… விஜய் சேதுபதி படத்தில் நடந்தது என்ன?
இந்நிலையில் ஒரு த்ரோபேக்காக விஜய் நடித்த 4 திரைப்படங்கள் இதே நாளில் (ஜன.12) கடந்த கால பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளன. அந்த வகையில் ‘போக்கிரி’ வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகள் ஆகின்றன.
18Yearsofpokkiri என ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். அதேபோல, ‘வில்லு’ திரைப்படம் வெளியாகி 16 ஆண்டுகளும், ‘நண்பன்’ வெளியாகி 13 ஆண்டுகளும், ‘பைரவா’ படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆகியுள்ளன. ஒரே நாளில் விஜயின் இத்தனை படங்கள் வெளியாகியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
January 12, 2025 10:08 AM IST