தங்கத்தின் மதிப்பு காரணமாக காலங்காலமாக, மக்கள் தங்கத்தை சேகரித்து மிகுந்த ஆர்வத்துடன் பதுக்கி வைத்து வருகின்றனர். தங்கம் ஒரு பங்கு சார்ந்த பொருள் அல்ல; பெரிய மூலதனம். தேவைப்படும் ரியல் எஸ்டேட்டை போன்றதும் அல்ல. இது ஒரு உலகளாவிய கவர்ச்சிகரமான சொத்து ஆகும். வரலாற்று ரீதியாகவே, பணவீக்கம் மற்றும் பண மதிப்பிழப்புக்கு எதிராக பாதுகாப்பதில் தங்கம் திறம்பட செயல்படுகிறது.

தங்கத்தை விற்க அல்லது வர்த்தகம் செய்ய எளிதானது. உங்கள் போர்ட்ஃபோலியோவில் தங்கத்தைச் சேர்ப்பது உங்களுக்கு வரும் ஆபத்தை வேறுபடுத்துவது மட்டுமல்லாமல், உறுதியான சொத்தையும் வழங்குகிறது.

தங்க நாணயங்களின் தனித்துவம்

தங்க முதலீட்டு சந்தையில் முதல்முறையாக முதலீடு செய்பவர்களுக்கு தங்க நாணயங்கள் ஒரு கவர்ச்சிகரமான விருப்பமாக இருக்கும். தங்க நாணயங்கள் பல்வேறு எடைகள் மற்றும் மதிப்புகளில் கிடைக்கின்றன.

தங்க நாணயங்களை வாங்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை

தங்கக் காசுகளில் முதலீடு செய்வது அவசரப்பட்டு செய்யக்கூடிய விஷயம் அல்ல. தங்க நாணயங்களில் முதலீடு செய்வதற்கு முன் நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்:

எங்கிருந்து வாங்குகிறோம் என்பது முக்கியம்

நம்பகமான டீலர்கள் அல்லது பிற நம்பகமான நிறுவனங்களிடமிருந்து எப்போதும் தங்கத்தை வாங்க வேண்டும். இது உறுதியான எடை மற்றும் தூய்மையுடன் கூடிய முறையான நாணயங்களைப் பெறுவதை உறுதி செய்கிறது. தங்க நாணயங்கள் 22 காரட் (91.67% தூய்மை)ல் வருகின்றன. அவை கட்டாயமாக BIS ஹால்மார்க்காக இருக்க வேண்டும். 24 காரட் (99.9% தூய்மை) ஹால்மார்க் செய்யப்படாமல் இருக்கலாம். ஆனால் நம்பகமான சப்ளையர்களிடமிருந்து அதன் தூய்மைத்தன்மை சான்றளிக்கப்பட வேண்டும்.

இதையும் படிக்க: தனியார், பொதுத்துறை, சர்வதேச வங்கிகள் 3 வருட FDக்கு கொடுக்கும் வட்டி குறித்த ஒப்பீடு…!

மதிப்பு வகைபாடுகளை புரிந்து கொள்ளுங்கள்

தங்க நாணயங்கள் 1 கிராம் முதல் 50 கிராம் வரை வெவ்வேறு எடைகளில் வருகின்றன. 50 கிராமுக்கு மேல், பொதுவாக தங்கம் நாணயங்களாக அச்சிடப்படுவதில்லை. ஆனால், பொன் வடிவிலோ அல்லது கட்டிகளாகவோ வருகிறது. தங்கத்தில் முதல்முறையாக முதலீடு செய்கிறீர்கள் என்றால், சிறிய மதிப்புகள் சிறந்தவை. இது ஒருவரின் நிதி திறன்களை கஷ்டப்படுத்தாமல் மெதுவாக அதிகரிக்க முடியும்.

தங்கத்திற்கு அப்பாற்பட்ட செலவுகளை மதிப்பிடுங்கள்

வழக்கமாக தங்க நாணயம் அச்சிடுவதற்கான கட்டணங்களுடன் வரும். இது ஒரு வியாபாரிக்கும், மற்றொரு வியாபாரிக்கும் இடையே மாறுபடும். சிறந்த மதிப்பைப் பெறுவதற்கு எந்தவொரு முடிவெடுப்பதற்கு முன்னரும், இந்தக் கட்டணங்கள் அனைத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

இதையும் படிக்க: அமேசான் மெகா எலக்ட்ரானிக்ஸ் டேஸ் 2025: லேப்டாப்கள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட்வாட்ச்கள் உள்ளிட்டவற்றிற்கு 80% வரை தள்ளுபடி! 

பாதுகாப்பான சேமிப்பு

தங்க நாணயங்களை வங்கி லாக்கரில் அல்லது வீட்டில் பாதுகாப்பாக வைப்பதன் மூலம் உங்கள் முதலீட்டைப் பாதுகாக்கலாம். இல்லையென்றால், இதற்கு மாற்றான டிஜிட்டல் தங்கம் என்று அழைக்கப்படும் நவீன வடிவமும் உள்ளது.

எளிதில் விற்கவும், வாங்கவும் முடியும்

தங்க நாணயங்களை விற்பது எளிதானது. எனவே, நகைகளை விட சிறந்த பணப்புழக்கத்தை வழங்குகிறது.

வரிகளை மனதில் கொண்டு திட்டமிடுங்கள்

தங்கத்தை விற்கும்போது, ​​இதில் கிடைக்கும் லாபம் எப்போதும் மூலதன ஆதாய வரிக்கு உட்பட்டது. எனவே, அதை கவனத்தில் கொள்ளுங்கள்.

தமிழ் செய்திகள்/வணிகம்/

தங்க நாணய முதலீடு: ஒவ்வொரு ஸ்மார்ட் முதலீட்டாளரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இவைதான்…!



Source link