திரையரங்குகளில் வெளியாகி ஒரு சில வாரங்களில் ஓடிடியில் பல படங்கள் வெளியாகின்றன. அந்த வரிசையில் இந்த வாரத்தில் நவம்பர் 28ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை என்னென்ன படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன. எந்த ஓடிடியில் வெளியாகின்றன என்று பார்க்கலாம்.
அந்தகன்: பிரசாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்த அந்தகன் திரைப்படம் இந்தியில் ரிலீஸ் ஆன அந்தாதூண் படத்தின் தமிழ் ரீமேக் தான். இந்த திரைப்படத்தில் சிம்ரன், வனிதா, சமுத்திரகனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள நிலையில், இந்த திரைப்படம் மூன்று மாதத்திற்கு பிறகு அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் தற்போது ஸ்ட்ரீம் ஆகின்றது.
தீபாவளி போனஸ்: ஜெயபால் இயக்கத்தில் விக்ராந்த் கதாநாயகனாக நடித்துள்ள படம்தான் தீபாவளி போனஸ். இந்த திரைப்படத்தில் விக்ராந்துக்கு ஜோடியாக ரித்விகா நடித்துள்ளார். தீபக்குமார் டாலா தயாரித்துள்ள இந்த திரைப்படம், திரையரங்கிற்கு வராமல், நேரடியாக ஆகா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது.
பிரதர்: ஜெயம் ரவியின் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீசான திரைப்படம்தான் பிரதர். பெரும் எதிர்பார்ப்போடு வந்த இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் சோபிக்கவில்லை. எல்லோரும் நெகட்டிவாக விமர்சித்ததால், வசூலும் இல்லை. இந்த திரைப்படத்தை எம்.ராஜேஷ் இயக்கியுள்ளார். ஜெயம் ரவியுடன் பிரியங்கா மோகன், நட்டி, பூமிகா, சீதா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் இருந்தாலும், வசூலை குவிக்க முடியவில்லை. இந்த திரைப்படம் நவம்பர் 29ஆம் தேதி முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
பிளடி பெக்கர்: கவின் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த திரைப்படம் பிளடி பெக்கர். இந்த திரைப்படத்தை சிவபாலன் இயக்கியுள்ளார். ஸ்டார் திரைப்படத்திற்கு பிறகு கவின் நடித்து வெளியான பிளடி பெக்கர் கலவையான விமர்சனத்தை பெற்றது. இயக்குநர் நெல்சன் இந்த திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். இப்படம் நவம்பர் 29ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது.
இதையும் படிங்க:
பள்ளி நண்பரை கரம்பிடிக்கப் போகும் நடிகை கீர்த்தி சுரேஷ் – திருமணம் எங்கே..? தேதி என்ன..?
ஷ்: மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் வெளிவந்த படம் ‘ஷ்’. இந்த திரைப்படத்தில் பிரீத்தி ஆதித்யா, வாலி மோகன், தாஸ், ஹரிஷ், கார்த்திகேயன், இனியா, சோனியா அகர்வால், ஐஸ்வர்யா தத்தா, ஸ்ரீகாந்த என பலரும் நடித்துள்ளனர். ஹிந்தியில் ஹிட்டான லாஸ்ட் ஸ்டோரிஸ் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த ‘ஷ்’ திரைப்படம். இந்த திரைப்படம் நவம்பர் 29ஆம் தேதி ஆகா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
பாராசூட்: ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் தான் பாராசூட். இந்த வெப் சீரிஸில் கிஷோர், கிருஷ்ணா, காளி வெங்கட், கனி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸ் நவம்பர் 29ஆம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.
அலெக்ஸாண்டரின் விதி: திரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த அலெக்ஸாண்டரின் விதி திரைப்படத்தில் ஜிம்மி ஜெர்கின், அவினாஷ், திவாரி மற்றும் தமனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸில் நவம்பர் 29ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
.