Last Updated:
சேட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான சுசீர் பாலாஜி, அந்த நிறுவனம் பதிப்புரிமை விதிகளை மீறுவதாக கடந்த அக்டோபர் மாதம் குற்றம்சாட்டினார்.
ஓபன் ஏஐ நிறுவனம் மீது குற்றச்சாட்டு வைத்ததை தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய வம்சாவளி இளைஞரின் வீட்டில் இருந்த பென்டிரைவ் மயமானது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சேட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான சுசீர் பாலாஜி, அந்த நிறுவனம் பதிப்புரிமை விதிகளை மீறுவதாக கடந்த அக்டோபர் மாதம் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தனது இல்லத்தில், டிசம்பர் 14ம் தேதி அவர் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தன்னைதானே சுட்டுக்கொண்டு சுசீர் தற்கொலை செய்துக்கொண்டதாக போலீசார் தெரிவித்த நிலையில், சுசீரின் பெற்றோர் அதனை மறுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக அமெரிக்க புலானய்வு அமைப்பு விசாரணை நடத்த அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சுசீரின் பிரேத பரிசோதனை மற்றும் , அவரது அறையில் நடத்தப்பட்ட தடயவியல் ஆய்வின் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.
இந்நிலையில், தனியார் விசாரணை அமைப்பு நடத்திய விசாரணையில் சுசீரின் அறையில் இருந்த சிசிடிவி கேமராக்கள், பென்டிரைவ் காணாமல் போனது தெரியவந்துள்ளது.
மேலும், ஹெட்பொனில் பாடல் கேட்டுக்கொண்டு இருந்த போது சுசீர் பின்பக்கமாக தலையில் தாக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுசீரின் அறை சூரையாடப்பட்டிருப்பதாக அந்த விசாரணை அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், அவரது கணினியில் இருந்த தரவுகளை யாரோ எடுத்திருப்பதாகவும் கூறியுள்ளது.
January 04, 2025 1:47 PM IST
ஓபன் ஏஐ மீது குற்றச்சாட்டு வைத்த இளைஞர் மரணம்.. வீட்டில் இருந்த பென்டிரைவ் மாயம்.. கணினி தரவுகள் அழிப்பு..!