இந்தியாவில் பண்டிகை சீசன் களை கட்டியுள்ள நிலையில் பிரபல ஸ்மார்ட் ஃபோன் நிறுவனமான ஓப்போ (Oppo) முன்னிட்டு தனது ஸ்மார்ட் ஃபோன்களுக்கு சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக, நிறுவனம் Oppo Reno 12 சீரிஸ் மற்றும் Oppo F27 Pro+ 5G உள்ளிட்ட மொபைல்களுக்கு சிறப்பு தள்ளுபடிகளை வழங்குகிறது.

மேலும் இந்த சீன தொழில்நுட்ப பிராண்ட் நிறுவனமான ஓப்போ தேர்ந்தெடுக்கப்பட்ட மொபைல்களுக்கு நோ-காஸ்ட் EMI சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. மேலும் இந்த ஆஃபர் காலத்தில் ஓப்போ மொபைல்களை வாங்குவோருக்கு கேஷ் பிரைசஸ், Oppo Find N3 Flip மற்றும் பிற Oppo தயாரிப்புகளை வெல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது நேரலையில் உள்ள இந்த சிறப்பு விற்பனை வரும் நவம்பர் 7-ஆம் தேதி வரை நீடிக்கும்.

விளம்பரம்

News18

இந்தியாவில் Oppo-வின் பண்டிகைகால விற்பனை:

ஓப்போ நிறுவனம் இந்தியாவில் “Pay 0, Worry 0, Win Rs. 10 Lakh” என்ற ஆஃபரை அறிவித்துள்ளது. இதில் நோ-காஸ்ட் EMI-க்கள், ஜீரோ டவுன் பேமென்ட், ஜீரோ ப்ராசஸிங் கட்டணம்மற்றும் தகுதியான Oppo மொபைல்களை வாங்கினால் இன்ஸ்டன்ட் கேஷ்பேக் உள்ளிட்டவை அடங்கும். Oppo Reno 12 Pro 5G மற்றும் Oppo F27 Pro+ 5G உள்ளிட்ட பிரபலமான மாடல்களில் 12 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் EMI பிளான்ஸ்களை நிறுவனம் வழங்குகிறது.

விளம்பரம்

பஜாஜ் ஃபைனான்ஸ், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், ஹெச்டிபி ஃபைனான்ஸ், டிவிஎஸ் ஃபைனான்ஸ் மற்றும் கோடக் பேங்க் போன்ற நிறுவனங்களிடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு ஆறு முதல் ஒன்பது மாத கால அவகாசத்திற்கு ஜீரோ ப்ராசசிங் கட்டண பிளான்கள் வழங்கப்படுகிறது. ஜீரோ டவுன் பேமென்ட் திட்டங்களை 11 அல்லது 12 மாதங்கள் வரையிலான காலத்திற்கு தேர்வு செய்யலாம். நவம்பர் 5-ஆம் தேதி வரை நிறுவனத்தின் இந்திய ரீடெய்ல் ஸ்டோர்கள், ஒப்போ இ-ஸ்டோர், பிளிப்கார்ட் மற்றும் அமேசான் மூலம் போன்களை வாங்கும் வாங்குபவர்கள் மேற்கண்ட இந்த நன்மைகளைப் பெறலாம்.

விளம்பரம்

ஒப்போ ரெனோ 11 சீரிஸ், ஒப்போ எஃப்25 ப்ரோ, ஒப்போ எஃப்27 5ஜி, ஒப்போ ஏ3 ப்ரோ 5ஜி மற்றும் ஒப்போ கே12எக்ஸ் 5ஜி மொபைல்கள் தள்ளுபடி வழங்கப்படும் டிவைஸ்களில் பட்டியலிடப்பட்டுள்ன. நவம்பர் 7-ஆம் தேதிக்கு முன் ஓப்போ ஸ்மார்ட் ஃபோன்களை வாங்குபவர்கள் சிறப்புச் சலுகைக்கு தகுதியுடையவர்கள் மற்றும் ரூ.1 லட்சம், Oppo Find N3 Flip, Oppo Enco Buds 2 மற்றும் Oppo Pad ஆகியவற்றை வெல்லும் வாய்ப்பையும் கூடவே பெறுவார்கள். இது தவிர ஸ்கிரீன் ப்ரொட்டக்ஷன் பிளான், Oppo Care+ சப்ஸ்கிரிப்ஷன், ரிவார்ட் பாயின்டஸ் மற்றும் பிற பண பரிசுகளையும் வெல்லலாம்.

விளம்பரம்

Also read |
Infinix Zero 40 | அசத்தல் அம்சங்களுடன் புதிய 5ஜி மொபைலை இந்தியாவில் அறிமுகப்படுத்திய இன்ஃபினிக்ஸ் நிறுவனம்! – விலை எவ்வளவு தெரியுமா?

மேலும் HDFC, ICICI, SBI, Bank of Baroda, IDFC First, Kotak, AU Small Finance, RBL, DBS மற்றும் ஃபெடரல் வங்கி உள்ளிட்டவற்றின் பேங்க் கார்டுகள் மூலம் EMI மற்றும் EMI அல்லாத பரிவர்த்தனைகளை மேகொண்டு ஒப்போ டிவைஸ்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் 10% இன்ஸ்டன்ட் கேஷ்பேக் மூலம் பயனடையலாம். தவிரIDFC First bank யூஸர்கள் Oppo Reno 12 சீரிஸில் ஒரு EMI கேஷ்பேக்கைப் பெறலாம். Oppo Reno 12 Pro 5G மொபைலின் 12GB + 256GB வேரியன்ட்டின் விலை ரூ.36,999 மற்றும் 12GB + 512GB வேரியன்ட்டின் விலை ரூ.40,999 ஆகும். Oppo F27 Pro+ 5G மொபைலின் 8GB + 128GB வேரியன்ட்டின் விலை ரூ.27,999 மற்றும் இதன் 8GB + 256GB வேரியன்ட்டின் விலை ரூ.29,999 ஆகும்.

விளம்பரம்

.



Source link