Last Updated:

இது ஆண்ட்ராய்டு 15 ஐ அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஒருங்கிணைந்த AI அம்சங்களுடன் வருகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும், சந்தையில் உள்ள ஒன்பிளஸ் 13 மற்றும் சியோமி 15 போன்ற பல ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடும் என்றும் கூறப்படுகிறது.

News18

ஓப்போ நிறுவனம் இறுதியாக ஓப்போ பைண்ட் X8 ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது இந்தியாவில் உள்ள ஸ்மார்ட்போன் பிரியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்த நிறுவனம் ஆனது சமீபத்தில் சீனாவில் அதன் புதிய முதன்மையான ஃபைண்ட் X8 மற்றும் ஃபைண்ட் X8 ப்ரோ-வை அறிமுகப்படுத்தியது, மற்றும் இரண்டு போன்களும் விரைவில் இந்தியா உட்பட உலக சந்தைகளில் வரும் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் நவம்பர் 21ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 சீரிஸ் இந்தியா வெளியீட்டு தேதி:

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 சீரிஸ் ஆனது இந்தோனேசியாவின் பாலியில் நடைபெறும் வெளியீட்டு நிகழ்வில் நவம்பர் 21 அன்று காலை 10:30 மணிக்கு உலகளவில் வெளியிடப்படும். ஓப்போ இந்தியா இணையதளத்தில் உள்ள பேனரின்படி, அதே நாளில் இவ்விரு மாடல்களும் இந்தியாவில் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டிருந்தது. இந்த ஓப்போ பைண்ட் எக்ஸ்8 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது, பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் வழியாக கிடைக்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஓப்போ பைண்ட் எக்ஸ்8 மற்றும் ஓப்போ பைண்ட் எக்ஸ்8 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் தற்போது ப்ரீ-ஆர்டர் மூலம் பதிவு செய்யலாம். மேலும், நவம்பர் 21 ஆம் தேதி அன்று இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுடன் ஓப்போ ColorOS 15 ஐ இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்துகிறது, இது ஆண்ட்ராய்டு 15 ஐ அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஒருங்கிணைந்த AI அம்சங்களுடன் வருகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும், சந்தையில் உள்ள ஒன்பிளஸ் 13 மற்றும் சியோமி 15 போன்ற பல ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடும் என்றும் கூறப்படுகிறது.

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 சீரிஸ்: விவரங்கள் இங்கே

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை ஓப்போ பைண்ட் எக்ஸ்8 ஸ்மார்ட்போனின் க்ளோபல் வேரியண்ட் ஆனது 6.59 இன்ச் டிஸ்பிளே, 193g எடை மற்றும் 7.85mm திக்நெஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. இது ஸ்பேஸ் பிளாக் மற்றும் ஸ்டார் கிரே ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது. ப்ரோ மாடல் ஆனது 6.78 இன்ச் டிஸ்பிளே உடன் ஸ்பேஸ் பிளாக் மற்றும் பேர்ல் ஒயிட் ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

ஓப்போ பைண்ட் எக்ஸ்8 ஸ்மார்ட்போன் ஆனது 5630mAh பேட்டரியுடன் உலகளவில் அறிமுகப்படுத்தப்படும், அதே நேரத்தில் ப்ரோ வேரியண்ட் ஆனது 5910mAh பேட்டரியுடன் வரும். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் மீடியாடெக் டைமன்சிட்டி 9400 சிப்செட் மற்றும் ஹசல்பிளாட் கேமரா யூனிட்கள் ஆகியவை கொண்டிருக்கும்.

இதையும் படிங்க: ரூ.10,000 பட்ஜெட்டிற்குள் கிடைக்கக்கூடிய சிறந்த 5G ஃபோன்கள்… லிஸ்ட் இதோ!

கேமராக்களை பொறுத்தவரை ஓப்போ பைண்ட் எக்ஸ்8 ஸ்மார்ட்போன் ஆனது 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் சோனி LTY-700 ப்ரைமரி சென்சார், 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா, 50 மெகாபிக்சல் சோனி LYT-600 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஷூட்டர் ஆகியவற்றை கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும்.



Source link