Last Updated:
பணியிலிருந்து ஓய்வு பெற்ற பலருக்கும் ஓய்வூதியம் நிலையான வருமான ஆதாரத்தை உறுதி செய்கிறது. எனினும், ஓய்வுக்குப் பிறகு வாழ்க்கை எதிர்பாராத நிதித் தேவைகளைக் கொண்டு வரலாம்.
பணியிலிருந்து ஓய்வு பெற்ற பலருக்கும் ஓய்வூதியம் நிலையான வருமான ஆதாரத்தை உறுதி செய்கிறது. எனினும், ஓய்வுக்குப் பிறகு வாழ்க்கை எதிர்பாராத நிதித் தேவைகளைக் கொண்டு வரலாம். உதாரணமாக மருத்துவ அவசரநிலைகள் முதல் திருமணங்களுக்கு நிதியளிப்பது அல்லது சுற்றுலா செல்வது வரை எனப் பல செலவுகள் வரக்கூடும். இதுபோன்ற சூழ்நிலைகளில், வங்கிகள் வழங்கும் ஓய்வூதியக் கடன்கள் பெரும் உதவியாக இருக்கும். இரண்டு பெரிய வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகியவை நிதி உதவி கோரும் ஓய்வூதியதாரர்களுக்கு என்ன சலுகை வழங்குகின்றன என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.
பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஓய்வூதியக் கடன்:
பாரத ஸ்டேட் வங்கியின் ஓய்வூதியக் கடன் திட்டமானது மத்திய, மாநில மற்றும் பாதுகாப்பு பணிகளிலிருந்து ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு சிரமமில்லாத கடன் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ அவசரநிலை, குடும்ப நிகழ்வு அல்லது விடுமுறைக்கு கூட, ஓய்வு பெற்றவர்கள் நிதி உதவியை எளிதாக அணுக முடியும் என்பதை இந்த வங்கி உறுதி செய்கிறது.
- எஸ்பிஐ: மத்திய மற்றும் மாநில அரசு ஓய்வூதியர்களுக்கான தகுதி
- வயது வரம்பு: ஓய்வூதியம் பெறுவோர் 76 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
- ஓய்வூதியம்: எஸ்பிஐ மூலம் ஓய்வூதியம் பெற வேண்டும்.
- ஒப்பந்தம்: ஓய்வூதியம் பெறுவோர் கடன் காலத்தின் போது தங்கள் ஓய்வூதியக் கணக்கை வேறொரு வங்கிக்கு மாற்றக்கூடாது என்ற திரும்பப்பெற முடியாத உறுதிமொழியை அளிக்க வேண்டும்.
- உத்தரவாதம்: வாழ்க்கைத் துணை (குடும்ப ஓய்வூதியத்திற்குத் தகுதியானவரின்) அல்லது பொருத்தமான மூன்றாம் தரப்பினரின் உத்தரவாதம் தேவை.
எஸ்பிஐ:ஓய்வூதியதாரர்களுக்கான தகுதி:
- ஆயுதப் படைகள், துணை ராணுவப் படைகள், கடலோரக் காவல்படை, ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றிலிருந்து ஓய்வூதியம் பெறுபவர்கள் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
- வயது அளவுகோல்: குறைந்தபட்ச வயது தேவை இல்லை. அதிகபட்ச வயது 76 ஆண்டுகள். குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான தகுதி
- ஓய்வூதியம் பெறுபவரின் மரணத்திற்குப் பிறகு குடும்ப உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெற அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். ஆனால் வயது 76க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பேங்க் ஆஃப் பரோடா ஓய்வூதிய கடன்:
- பேங்க் ஆஃப் பரோடாவும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்குத் தனிப்பட்ட கடன்களை வழங்குகிறது. ஓய்வு பெற்றவர்கள் எதிர்பாராத சூழ்நிலைகளில் கூட மன அழுத்தமில்லாத வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என்பதை இந்தக் கடன் உறுதி செய்கிறது.
- தகுதி அளவுகோல்கள்: பேங்க் ஆஃப் பரோடா கிளைகள் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் தகுதி உடையவர்கள் ஆவார்கள்.
- கருவூலம்/பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் (DPDO) மூலம் பேங்க் ஆஃப் பரோடா கணக்குகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
- ஓய்வூதியம் பெறுவோர் தங்களது ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது பேங்க் ஆஃப் பரோடா கிளை மூலம் பெற்றிருக்க வேண்டும்.
முக்கிய அம்சங்கள்:
- நோக்கம்: வெற்று ஊகத்தைத் தவிர வேறு எந்த நியாயமான நோக்கத்திற்காகவும் கடன்கள் எடுக்கலாம்.
- திருப்பிச் செலுத்தும் காலம்: 70 வயது வரை ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு 60 மாதங்கள் வரை கடன் காலம் ஆகும்.
- 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு 36 மாதங்கள் வரை கடன் காலம்.
- கடனை திருப்பிச் செலுத்தும் திறன்: கடன் இஎம்ஐ உட்பட மொத்த மாதாந்திர விலக்குகள், மாதாந்திர ஓய்வூதியத்தில் 60% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது.
எஸ்பிஐ மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய இரண்டு வங்கிகளும், ஓய்வூதிய தொகையை தங்கள் கிளைகள் மூலம் வரவு வைக்கப்பட வேண்டும் எனக் கூறுகிறது. இது நிதி ஒழுக்கம் மற்றும் திருப்பிச் செலுத்தும் பாதுகாப்பை உறுதி செய்கிறது. கூடுதலாக, எஸ்பிஐ ஒரு உத்தரவாததாரரை கோருகையில், பேங்க் ஆஃப் பரோடா ஓவூதியம் பெறுவோரின் தனிப்பட்ட தகுதி மற்றும் கணக்கு நடத்தை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
January 21, 2025 12:05 PM IST