Last Updated:
கங்கனா ரனாவத் இயக்கத்தில் வெளியான ‘எமர்ஜென்சி’ திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. வீட்டை அடமானம் வைத்து பல போராட்டங்களுக்குப் பிறகு வெளியான இந்தப் படத்தின் வசூல் குறித்து பார்ப்போம்.
கங்கனா ரனாவத் இயக்கத்தில் வெளியான ‘எமர்ஜென்சி’ திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. வீட்டை அடமானம் வைத்து பல போராட்டங்களுக்குப் பிறகு வெளியான இந்தப் படத்தின் வசூல் குறித்து பார்ப்போம்.
நடிகை கங்கனா ரனாவத்தின் சமீபத்திய படங்கள் கடும் தோல்வியை சந்தித்து வருகின்றன. குறிப்பாக 2021-ம் ஆண்டு வெளியான ‘தாகத்’ பாலிவுட் திரைப்படம் ரூ.85 கோடி பட்ஜெட்டில் உருவானது.
ஆனால் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் வெறும் ரூ.3 கோடி என கூறப்படுகிறது. தமிழில் அவர் நடித்த ‘சந்திரமுகி’ திரைப்படம் படுதோல்வி அடைந்தது. ரூ.70 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் ‘தேஜஸ்’ திரைப்படம் வெறும் ரூ.6 கோடியை வசூலித்ததாக கூறப்படுகிறது.
இப்படியான சோகங்களை அவரை துரத்திக்கொண்டிருக்கும்போது, பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கங்கனா ரனாவத் தயாரித்து, இயக்கி நடித்த படம் ‘எமர்ஜென்சி’. இந்தப் படத்துக்காக கங்கனா தனது சொந்த வீட்டையே அடமானம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் வாசிக்க: Box office | 75 கோடியில் 4 பாடல்கள்…ரூ.500 கோடி பட்ஜெட்…2025-ன் முதல் பாக்ஸ் ஆஃபீஸ் பின்னடைவு எந்தப் படம்?
ரூ.60 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இந்தப் படம் கடந்த ஜனவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சென்சார் பிரச்சினைகளையெல்லாம் தாண்டி படம் வெளியானதால் கங்கனா நிம்மதியடைந்தார்.
ஆனால், அவரது சந்தோஷம் நீண்ட நாள் நிலைக்கவில்லை. படம் வெளியான முதல் நாள் இந்திய அளவில் ரூ.1 கோடி வசூலை மட்டுமே ஈட்டியதாக கூறப்படுகிறது. இரண்டாவது நாள் கொஞ்சம் முன்னேறி ரூ.4 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தமாக படம் இதுவரை ரூ.11 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரூ.60 கோடி பட்ஜெட் கொண்ட படம் வெறும் ரூ.11 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது சரிவாக பார்க்கப்படுகிறது.
January 21, 2025 1:00 PM IST